வெள்ளி, 3 ஜனவரி, 2020

உத்தர பிரதேசம் . காருக்குள் 3 பிணங்கள்.. நெடுஞ்சாலையில் சுட்டு கொலை ... வியாபார கூட்டாளிகள் கைது ..

https://timesofindia.indiatimes.com/city/agra/ex-associates-booked-for-murder-of-delhi-bullion-trader-his-family/articleshow/73082810.cmsThe deceased were identified as Neeraj Agarwal, Neha 

Agarwal, and Dhanya Agarwal. A boy, Shaurya Agarwal, who was critically injured, was also found at the spot. He was taken to a hospital for treatment.
By Hemavandhana - tamil.oneindia.com : மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் அந்த நகரையே உலுக்கி விட்டது.
மதுராவை உலுக்கிய இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழ்துள்ளனர். ஒரு உயிர் ஊசலாடி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரா எஸ்பி அசோக் குமார் மீனா விவரித்துள்ளார்.> சம்பவம் குறித்து அவர் கூறியது இதுதான்: யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே விருந்தாவனுக்கு அருகே ஒரு கார் நிற்பதாகவும், அதில் சில உடல்கள் இருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்தனர். கார் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தபோது ஒரு ஆண், பெண், மற்றும் ஒரு குழந்தை பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
3 பேரின் உடலிலும் புல்லட்கள் பாய்ந்த நிலையில் இருந்தது. ஒரு பையன் உயிருக்குப் போராடியபடி இருந்தான். அவனை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

இறந்து கிடந்த நபர் பெயர் நீரஜ். இவர் மதுராவின் ஜெகன்னாத் பூரி பகுதியைச் சேர்ந்தவர். தொழிலதிபர். தனது மனைவி மற்றும் மகன், மகளை அவர் சுட்டுள்ளார். பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

தற்கொலை தற்கொலை கடந்த ஆறு மாதமாக டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் நீரஜ். அங்கிருந்தபடி தனது வேலையைப் பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதுராவுக்கு குடும்பத்துடன் வந்த அவர் பின்னர் காரில் டெல்லி கிளம்பினார். வழியில் காரை நிறுத்தியுள்ளனர். அங்கு வைத்துத்தான் தனது குடும்பத்தினரை அவர் சுட்டுள்ளார். தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பதட்டம் இல்லை ஆனால் இது தற்கொலை அல்ல , யாரோ சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற கோணமும் எழுந்துள்ளது. போலீஸார் அந்தக் கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நீரஜ் மிகவும் இயல்பான நிலையில்தான் டெல்லிக்குக் கிளம்பியதாக

அவர் பதட்டமாக இல்லை என்றும் உறவினர் ஒருவர் கூறியுள்ளார். ? மேலும் தற்கொலைக் குறிப்பும் இல்லாததால் இது கொலையாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உயிருக்குப் போராடி வரும் 10 வயது சிறுவன் பிழைத்து வந்தால்தான் நடந்தது என்ன என்று தெரிய வரும். அவனுக்காக தற்போது போலீஸார் காத்துக் கொண்டுள்ளனர்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக