ஞாயிறு, 5 ஜனவரி, 2020

முதல் 100 இடங்களுக்குள் ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் : குரூப் 4 தேர்வில் முறைகேடு?

முதல் 100 இடங்களுக்குள் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் : குரூப் 4 தேர்வில் முறைகேடு?மாலைமலர் :குரூப் 4 தேர்வு தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக தேர்வானவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. இந்தத் தேர்வை 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதை பார்த்ததும் தேர்வர்கள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உன்னிப்பாக கவனித்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தரவரிசை பட்டியல் குறித்த ஆவணங்களை சரிபார்த்த பின், அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக