சனி, 28 டிசம்பர், 2019

பார்படோஸில் நித்யானந்தா,, புதிய திருப்பம்! Nithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location

https://www.republicworld.com/india-news/general-news/nithyananda-in-barbados-complainants-daughters-affidavits-confirm-t.htmlNithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location
n another hearing of the habeas corpus matter of the self-styled Godman Nithyananda, two affidavits were filed in the Gujarat High Court by the legal team representing the corpuses claiming that the girls (daughters of the complainant Janardhan Sharma ) do not want to come to India since they ‘fear for their lives’. Both affidavits were also notarised and attested in Barbados – which proved that the girls – Lopa Mudra and Nithyananditha were in Barbados. பார்படோஸில் நித்யானந்தா?: வழக்கில் புதிய திருப்பம்!மின்னம்பலம் : நித்யானந்தா தனது இரண்டு மகள்களைச் சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட இரு பெண்களும் இந்தியத் தூதரகத்தில் ஆஜராகக் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நித்யானந்தா வசம் உள்ள இந்த இரு பெண்களும் டிசம்பர் 6ஆம் தேதி ஒரு பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்மூலம் அவர்கள் நித்யானந்தாவுடன், அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருப்பது தெரியவந்ததாக அவரது வழக்கறிஞர் பிபி நாயக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவர்களது பிரமாணப் பத்திரத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த இரு பெண்கள் சார்பிலும் மீண்டும் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு இந்தியத் தீவுகளான பார்படோஸில் இருந்து ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் நித்யானந்தா பார்படோஸில் இருப்பதாக அறியப்படுகிறது. எனினும் அவர்கள் பார்படோஸில் தான் இருக்கிறார்களா என்பது உறுதிப்படத் தெரியவில்லை. அவர்கள் தங்களது, பிரமாணப் பத்திரத்தில், ”நாங்கள் நித்யானந்தாவால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். நாங்கள் அங்கு வந்தால் நித்யானந்தா மீது பொய் பாலியல் வழக்குத் தொடர தந்தை வற்புறுத்துவார். நாங்கள் இந்தியாவுக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெற்றோர்களைச் சந்திக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது. காவலில் வைக்கப்பட்டுள்ள நித்யானந்தா சிஷியைகளான ப்ரணப்பிரியா, தத்வபிரியா இருவரையும் விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் இருவரும் அவர்களது தந்தையுடன் வர விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை டிசம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜனார்த்தனன் மகள்கள் எந்த நாட்டில் உள்ளார்களோ அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையானது ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக