வெள்ளி, 27 டிசம்பர், 2019

HERO உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”

வெந்து தணிந்தது காடு : “மார்க் ஷீட்,மற்ற நோட்டுப் புத்தகங்களைப் பார்த்திருக்கும் நீங்கள் என்றாவது உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”
ஹீரோ படம் பார்த்த அனைவரையும் யோசிக்க வைத்த வசனம் இது தான்!
எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கு இரு காரணங்கள் உண்டு..
முதலாவது மது அருந்துவது,புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்கிற அறிவிப்பு எங்கும் காண்பிக்கப் படாதது...
இரண்டாவது ,இன்றைய கல்வி முறை என்ற
ஒரு வித்தியாசமான கருவை யோசித்தது..

குடும்பத்துடன் குறிப்பாகக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்..
சூப்பர் ஹீரோ இலட்சியத்துடன் வளரும் குழந்தைகள் எப்படி சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்?
எப்படி வேலைக்குச் செல்பவர்கள் தினமும் வீடு திரும்பி மறுநாள் வேலைக்கு ஆயத்தமாகி இந்த வலைக்குள் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிறார்கள் ...
சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ...

நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் கண்டுபிடிப்பாளர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.நாம் தான் அவர்களைக் கண்டு பிடிப்பதில்லை…
இப்படிப் படமெங்கிலும் தெறிக்க விட்டிருக்கிறார்கள்!
டிஜிட்டல் மோசடிகளை இரும்புத் திரை மூலம் காண்பித்த பி.எஸ்.மித்ரன் வணிக நோக்கமில்லாத மற்றுமொரு படத்தைக் கொடுத்திருக்கிறார்!
வேலைக்காரன் படத்திற்குப் பின் மீண்டும் இப்படிஒரு கதையைத் தேர்ந்தெடுத்த சிவகார்த்திகேயனைப் பாராட்ட வேண்டும்.
அர்ஜூன் இன்றளவும் தான் ஆக்‌ஷன் கிங் தான் என்று நிரூபித்திருக்கிறார்.வில்லனாக வரும் அபய் தியோல்,ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் இவர்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்!
இறுதிக் காட்சியில் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்கள் எனக் காண்பிக்கின்றனர்!
ஒரு கணமேனும் நம்மை யோசிக்க வைத்தாலும் அது தரமான படைப்பே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக