Gowthaman Mj - GoodReturns Tamil
:
டெல்லி: கடந்த பல மாதங்களாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில்
பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 1.4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்
வரி இழப்பு, 40,000 கோடி ரூபாய் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தள்ளுபடி
செய்யப்பட்ட வரிகளால் வரும் இழப்பு என அரசு கஜானாவுக்கு நஷ்டம் பெருகிக்
கொண்டே இருக்கிறது.
இதற்கு மத்தியில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் வேறு, மாதா மாதம்
குறைந்து கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் அரசு கஜானாவில் தேவையான பணமே
இருக்காதே..?
எனவே, சரக்கு மற்றும் சேவை வரியின் கட்டமைப்பை முழுமையாக மறு பரிசீலனை
செய்யப் போகிறார்களாம்.
வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெற இருக்கும்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிக்க இருக்கிறார்களாம்.
இதுவரை சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்த
(சுமார் 7 சதவிகித பொருட்கள்) பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி
விதிக்கலாமா..? வேண்டாமா..? என்பதை ஆலோசிக்க இருக்கிறார்களாம். அப்படி
விதிப்பதாக இருந்தால் எவ்வளவு சதவிகித வரம்பில் விதிப்பது என இந்த டிசம்பர்
18 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்களாம்.
மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையாக இருக்கும் காய்கறி, பழங்கள்,
பால், தயிர், உப்பு, தானியங்கள், இறைச்சி, முட்டை போன்ற பொருட்களுக்கும்,
கல்வி மற்றும் அடிப்படை மருத்துவம் போன்ற சேவைகளுக்கும் இப்போது வரை
ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. இப்போது இந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு
ஜிஎஸ்டி வசூலிக்கலாமா..? என விவாதிக்க இருக்கிறார்களாம். ஜிஎஸ்டி வரியை
அதிகரித்துவிடுவார்களோ..?
நிதி அமைச்சர், சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது
"மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை, ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு
வராமல் இருக்க முடியவில்லை என்றால், அதை குறைந்தபட்ச வரி வரம்பில் இருப்பதை
உறுதி செய்ய விரும்புகிறது அரசு" எனச் சொன்னார். அதாவது அடிப்படை
பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதை அரசு உறுதி செய்ய
விரும்புகிறது என்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிபுணர்கள் கருத்து
நிபுணர்கள் கருத்து
மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கீட்டுத் தொகையை சமாளிக்க,
ஜிஎஸ்டி செஸ் வரிகளை அதிகரிப்பது, இதுவரை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வராத
பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது, குறைந்த வரி வரம்பில் இருக்கும்
பொருட்கள் மற்றும் சேவைகளை கொஞ்சம் கூடுதல் வரி வரம்புக்குள் கொண்டு வருவது
போன்ற நடவடிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக
டிலாய்ட்டி நிறுவனத்தின் பார்ட்னர் எம் எஸ் மணி சொல்லி இருக்கிறார்.
அரசு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு
வராத வரை, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படைப் பொருட்களின் மீது
ஜிஎஸ்டி சுமை எளிதில் அதிகரிக்கும்" எனச் சொல்லி எச்சரித்து இருக்கிறார் பி
டபிள்யூ சி நிறுவனத்தின், தேசிய மறைமுக வரி பிரிவின் தலைவர் பிரதீக்
ஜெயின்.
Primis Player Placeholder
தயாராக இருங்கள்
தயாராக இருங்கள்
ஜிஎஸ்டி வரி வருவாய் சரிவால், மாநிலங்களுக்கு ஒழுங்காக ஜிஎஸ்டி பங்குத்
தொகையைக் கொடுக்க முடியவில்லை. எனவே இதை சமாளிக்க அரசு ஜிஎஸ்டி வரி வருவாயை
அதிகரிக்க முயல்கிறது.
இதில் நிதி அமைச்சர் மற்றும் இரண்டு நிபுணர்களின்
கருத்தைப் பார்க்கும் போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு
ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. ஆக மக்களே எதையும் தாங்கும்
இதயத்துடன் தயாராக இருங்கள்
Read more at: https://tamil.goodreturns.in/news/gst-exempted-goods-like-milk-vegetables-fruits-may-face-gst-tax-016959.html
Read more at: https://tamil.goodreturns.in/news/gst-exempted-goods-like-milk-vegetables-fruits-may-face-gst-tax-016959.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக