திங்கள், 2 டிசம்பர், 2019

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை.. திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு?

/tamil.oneindia.com/ : சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? திமுகவுக்கு ஆப்பு வைக்க இப்படி ஒரு அறிவிப்பா? அல்லது முக்கிய பதவிகளைக் கேட்டு அடம் பிடித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு ஆப்பு வைக்க இப்படி ஒரு அறிவிப்பா? அல்லது மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற அதிமுகவின் மாஸ்டர் பிளான்களில் இதுவும் ஒன்றா என தெரியவில்லை!
3 வருஷமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.. இதை தனக்கு சாதகமாக அதிமுக பயன்படுத்தி கொண்டாலும், தோற்றுவிடுவோம் என்று பயந்துதான் உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை என்று சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேடி கொண்டது திமுக!
இப்படி தேர்தல் நடத்தாமலேயே இருந்ததால், இதுதொடர்பான வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகின்றன. ஆனால், இதில் எந்த வழக்குக்குமே இன்னும் தீர்வு வராத நிலையில், இப்போது திடீரென உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் வழக்கு ஒரு பக்கம் என்றாலும் கூட, உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால் மத்திய நிதி கிடைக்காது என்பதும் இன்னொரு காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக