செவ்வாய், 24 டிசம்பர், 2019

அம்மா என்கிற பெருநிறுவன முதலாளி

Devi Somasundaram :  மதர் இண்டியா என்ற மாபெரும் கார்ப்ரேட்காரர் .
பன்னாட்டு கம்பெனிகள் மாபெரும் கார்ப்ரேட்கள் எங்க இருந்து தொடங்குச்சுன்னு பாத்தா நூல் பிடிச்ச மாதிரி போனா கடைசி நம்ம வீட்டு கிச்சன்ல வந்து நிக்கிது .
கார்ப்ரேட் எப்படி செயல்படுது ..முதலில் சிறு வியாபாரிகிட்டேர்ந்து நல்ல விலை குடுத்து பொருளை வாங்கி மார்க்கெட் செய்றேன்னு வரும்..விவசாயி சின்ன சின்ன வியாபாரி விட நல்ல விலை கிடைக்கிதேன்னு பொருளை அவர் கிட்ட தருவார் .
குழந்தைகளை நல்லா பாத்துக்கட்டும், வீட்ட நல்லா கவனிக்கட்டும்னு, நல்ல சாப்பாடு கிடைக்கும்னு பெரியவங்க வீட்டு பொறுப்ப வர மருமகள்கிட்ட தர மாதிரி .
அப்றம் கொஞ்ச கொஞ்சமா கார்ப்ரேட் இதான் விலை பொருளை என் கிட்ட மட்டும் தான் விற்கனும் ..இல்லன்னா நிலத்தை என் கிட்ட குடு நானே உற்பத்தி செய்துகறேன்னு புடிப்பான் .
வீட்டு நிர்வாகம் என்னுது ..இல்லன்னா உங்க புள்ளய கூட்டிட்டு தனிக்குடித்தனம் போறேன்னு குடும்பத்தை தன் வசப் படுத்துவதற மாதிரி
அப்றம் மொத்தமா கார்ப்ரேட் கன்றோலுக்கு போனதும் இப்ப அவன் பார்வை buyers பக்கம் போகும் ..அவர்கள எப்டி பொருளை வாங்க வைக்கிறதுன்னு ..அதுல ஒவ்வொருத்தர்க்கு ஒரு செல்லிங் பாய்ண்ட் வைப்பான்.

.
எங்கம்மா இருக்கே ..என் கிட்ட என்ன சாப்டறன்ன்னு கேட்காது ..பாப்பா வாய தொற, ஆ காட்டுன்னு தான் ஆரம்பிக்கும் . சாம்பார் சாதமோ, கூட்டோ என்ன சமைச்சு இருக்கோ அதை ஊட்டி விட்றும் ..அப்றம் பாப்பா தயிர் சாதம் சாப்டுறியான்னு கேக்கும் ..முதல்ல என்ன சாப்டறன்னா கேட்டுச்சு ..இப்ப ஏன் ? .
ஏன்னா நான் தயிர் சாதத்தில விழுந்துடுவேன்னு அதுக்கு தெரியும்..முதல்லயே கேட்டா தயிர் சாதம் மட்டும் போதும்னு சொல்லிடுவேன்னு என்ன வேணும்னே கேக்காது ..இப்ப சாம்பார் சாதம் சாப்டாச்சு ..தயிர் சாதத்தை எப்டியும் நான் வேணான்னு சொல்ல மாட்டேன்னு தெரியும்..அதனால தயிர் சாதம் சாப்டுறியான்னு என் selling point இறக்கும் ..
கொஞ்சம் விவரம் வந்து முதல்லயே என்ன சாப்டறன்னு கேக்க மாட்டியா ..அப்பவே கேக்கலாம்லன்னு கேட்டா வரவர பெரியவங்கள எதிர்த்து பேசற என்ன பழக்கம் இதுலாம் ..எங்க கத்துகிட்ட இதலாம்னு நாம என்னவோ கொலைக் குற்றம் செய்துட்ட மாதிரி ப்ளேட்ட திருப்பிடும் .
அதே அண்ணன் கிட்ட , தம்பி உனக்கு பிடிக்கும்னு எண்ணை கத்திரிக்காய் செய்தேண்டா சாப்டுன்னு ரீல் விடும்...அவனுக்கு அதான் செல்லிங்பாய்ண்ட் ..
அப்பா கிட்ட ..ஏங்க கால் வலிக்க மார்க்கெட் முழுக்க அலைஞ்சு கீரை வாங்கிட்டு வந்தேன்...கூட்டு வச்சேன் ..சாப்ட்டு எப்டி இருக்கு சொல்ங்கன்னு அடிச்சுடும் ..
எனக்கு விமர்சனத்துக்கே வாய்ப்பில்ல. ஹமாம் அம்மா மாதிரி..குளிக்காத டைப்ல .
அண்ணனுக்கு புடிச்சதுன்னு அதுவே சொல்லிடும் .. குழந்தைகள் கிண்டர் ஜாய்ஸ் தான் சாப்டும்ன்ற மாதிரி .
அப்பாவுக்கு .டாடா சால்ட் வாங்களன்னா தேச விரோதின்ற மாதிரி ...எல்லாருக்கும் ஒரு selling point வச்சு இருக்கும் .
அண்ணிக்கு ".உன் புருஷன் தீர்க்காயுசா இருக்கனும்னா தாலி போட்டுக்க",.அவ அதுக்கும் டிமிக்கி குடுத்தா "பெரியவங்க பேச்சை கேட்க்க சொல்லி தர்லியா உன் அம்மா ."
என் கிட்ட " இப்டி டிரஸ் போட்டா பொண்ண இப்டி வளர்த்து வச்சு இருக்கா விஜின்னு எனக்கு கெட்ட பேர் வாங்கி தராத பாப்பா " ..
ஒவ்வொருத்தர்க்கும் selling point விதவிதமா உருவாக்குறதுல நம்ம அம்மாகள் தான் கேடி .கார்ப்ரேட்லாம் காசே குடுக்காம இங்க சுட்ட ஐடியா தான் அவர்கள மார்க்கெட்டிங் ஸ்டேஜஜி.
அம்மாகள் மட்டும் pattern rights கேட்க்க ஆரம்பிச்சா பல பெரிய கம்பெனிகள் போர்ஜரி பேட்டர்ன்ல மாட்டும் .
" பாப்பா ஆ காட்டு " ..கிச்சன்லிருந்து மார்க்கெட்டிங் மேனேஜர்
12 மணிக்கு பாத்தப்ப முருங்கை மாங்காய் சாம்பாரும் , அவரைகாய் பொறியலும் கிச்சன் டேபிள்ள இருந்துச்சு ...ரசம் அடுப்புல இருந்துச்சு .இப்ப என்ன தரப்போவுதுன்னு தெர்ல ..
கார்ப்ரேட் அழைக்கிது...சாப்ட்டு வரேன் மக்களே .
#தேவி...
நைட்டு ஜீரோ .ச்சே ஹீரோ பாத்துட்டு ஜிந்திச்சது ..தமிழ் ராக்கர்ஸ்க்கு நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக