ஞாயிறு, 29 டிசம்பர், 2019

தலித்தாக இருப்பது பிரச்சனை... ஆனால் ஏழை தலித்தாக இருப்பது அதைவிட .

Shalin Maria Lawrence : அதாவது தோழர்,
இங்கே முகநூலில் உட்கார்ந்துகொண்டு என் தலைவர் பெரியவரா ? உன் தலைவர் பெரியவரா ? என்று சண்டை போடுவோம் ஆனால் இதுபோன்ற சண்டை போடுவோர் களம் கண்டு அடிபட்டதாக பெரிதாக பார்த்ததில்லை.
தோழர் இசையரசு அம்பேத்கர் போன்றோர் எந்த கட்சியையும் இயக்கத்தையும் சாராமல் தனி ஆளாக பல வருடங்களாக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் .இவர்களுக்கான ஆதரவு என்பது பெரிதும் கிடையாது.
எந்த கட்சியை சேர்ந்தவர்களும்( கம்யூனிஸ்ட் கட்சியை தவிர) எங்களுக்கு துணையாக நின்று பூர்வகுடிகளுக்காக போராடுவது கிடையாது.
பூர்வ குடிமக்கள் வெளியேறுவதில் ஆளுங்கட்சி முதற்கொண்டு பல
கட்சிகளும் கூட்டு களவாணிகளாகவே இருக்கின்றன. அதனாலேயே பல நேரங்களில் கள்ள மௌனம்.
சென்னை எங்கள் கோட்டை என்று மார்தட்டிக்கொள்ளும் எந்த திராவிட கட்சியும் ஓட்டு போட்ட எங்கள் மக்களுக்காக களத்திற்கு போராட வருவதில்லை.
எங்களைப் போன்றோர் முடிந்தவரை எழுதியும் பார்த்தாயிற்று, பேசியும் பார்த்தாயிற்று ,இசை அரசு போல் சிலர் களத்திற்கு சென்று போராடியும் பார்த்தாயிற்று ...ஆனால் சென்னையின் பிரச்சினைகளுக்கு அதிகமான ஊடக வெளிச்சமும் கவனமும் கிடைப்பதில்லை.

எந்த அரசியல் தலைவரின் மகனும் போராட்டம் செய்கிறேன் என்கிற பெயரில் ரோட்டில் சென்றால் கைது செய்யப்படுவதில்லை ஆனால் இசை அரசு போன்ற விளிம்புநிலை எளிய மனிதர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு அபாயகரமாக உடல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.
கட்சிகளுக்குள் எவ்வகையான சமரசங்கள் நீடிக்கின்றன?
Political privilege தமிழ்நாட்டின் சாபக்கேடு.
அதேபோல் பெசன்ட் நகர் அடையாறு போன்ற இடங்களில் போராட்டம் செய்யும் மேட்டுக்குடி மேல் வர்க்க மனிதர்களை காவல்துறை இவ்வாறு கீழ்த்தரமாக இழுத்துச்சென்று அடிக்குமா?
இங்கே தலித்தாக இருப்பது பிரச்சனை ஆனால் ஏழை தலித்தாக இருப்பது அதைவிட மோசமான ஒன்று.
மைக்கை பிடித்து வீராவேசமாக தலித்தியம் பேசி சென்றுவிடலாம் ஆனால் களத்தில் சென்று அடி வாங்குபவர்கள் யார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக