ஞாயிறு, 22 டிசம்பர், 2019

திமுகவின் பேரணிக்கு எதிராக வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

Velmurugan P - tamil.oneindia.com: சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நாளை பேரணி நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இதற்குஎதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கம் மிக பிரம்மாண்டமான பேரணி சென்னை நாளை (டிச.23) நடைபெற உள்ளது. இந்த பேரணியால் அஸ்ஸாம், உத்தரப்பிரதேசங்களில் ஏற்பட்டது போன்ற வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி திமுக பேரணிக்கு எதிராக இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், மற்றும் பிடி ஆஸா ஆகியோர் அமர்வு இரவு 8 மணிக்கு திமுகவின் பேரணிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உள்ளது. இதனால் நாளை திமுகவின் பேரணி நடக்குமா நடக்காதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக