திங்கள், 2 டிசம்பர், 2019

ஸ்டாலின் முதல்வர் ஆவார்..... பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார் .. என்ன நடக்கிறது? வீடியோ

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> tamil.oneindia.com - shyamsundar : சென்னை: தமிழகத்தில் விரைவில் காலம் வரும், அப்போது கட்டாயம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று பாஜகவின் துணை மாநில தலைவர் அரசகுமார் தெரிவித்துள்ளார்.
பிடித்தமான தலைவர் சீக்கிரம் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவும், ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் பாஜகவிற்கும் தற்போது குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது. இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
முக்கியமாக பாஜகவின் சமூக வலைதள குழு திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், திமுக நிர்வாகி திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் தனது பேச்சில், ஸ்டாலின் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை.  அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும். பிடித்தமான தலைவர் kkkk எம்ஜிஆர் எனக்கு பிடித்தமான தலைவர். அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. எம்ஜிஆருக்கு பிறகு நான் மதிக்க கூடிய தலைவர் ஸ்டாலின்தான். அவர் அனைத்து கட்சியையும் மதித்து நடக்கிறார். மிகவும் நேர்மையாக முடிவுகளை எடுக்கிறார். திமுக கரைவேட்டி வேண்டுமானால் எனக்கு தரலாம் .
மக்களின் ஆதரவு அவருக்கு நிறைய இருக்கிறது. அவர் உழைப்பால் உயர்ந்தவர். அவருக்கு முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது, என்று பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக