திங்கள், 9 டிசம்பர், 2019

திரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்

இரவிக்குமார் : ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். இவற்றில் மூன்று வேதங்களை முற்றாக ஓதத்
தெரிந்தவர்களுக்குப் பெயர் திரிவேதி. நான்கு வேதங்களையும் கற்று ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் சதுர்வேதி.
திரி என்றால் மூன்று. சதுர் என்றால் நான்கு. அதனால்தான் இவர்களுக்கு அரசர்களால் தானம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு பெயர் மங்கலம் என்று வழங்கப்படும். மூன்று வேதம் படித்தவர்க ளுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்த வர்களுக்கு சதுர்வேதி மங்கலம், இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம், வேதத்தைச் சரியாக படிக்காத பார்ப்பனர்களுக்கு கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள்.
வாஜபேய யாகம், பார்ப்பனர் புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்வார்கள்.

யாகங்கள் இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு குளிக்கும் காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்‍காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட பின்பும் கடுமையான தீக்காயம் அடைந்த அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார்.
சாகும் முன் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப் போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன்’’ என்று கூறியுள்ளார். மருத்துவர்களிடம், ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’ என்று கண்ணீர் விட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹரிஷங்கர் திரிவேதி
ராம்கிஷோர் திரிவேதி
ஷுபம் திரிவேதி
ஷிவம் திரிவேதி.
உமேஷ் வாஜ்பாய்
இப்போது முதலிலிருந்து படியுங்கள்.
- இரவிக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக