மாலைமலர் : குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்
பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் தலைமையில் பேரணி நடைபெற்றது.
அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
ஆலந்தூர்:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை நோக்கி இன்று பேரணி செல்லப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி ஆலந்தூர் கோர்ட்டு அருகே அந்த அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் காலையில் இருந்தே குவிந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சம்சுல்லுகா தலைமையில் ஆலந்தூர் கோர்ட்டு அருகே இருந்து பேரணி புறப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நடத்தப்பட்ட இந்த பேரணி மிகவும் பிரமாண்டமாக இருந்தது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் மிகப்பெரிய தேசிய கொடியை கொண்டு சென்றனர். தேசிய கொடியையும், அந்த அமைப்பின் கொடியையும் அவர்கள் ஏந்தி சென்றார்கள்.
பேரணியில் சென்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் கைகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரிய வாசகம் அடங்கிய பதாகைகளும் வைத்து இருந்தனர்.
தில்லையாடி வள்ளியம்மை சுரங்கப்பாதை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேரணியில் ஆலந்தூர் ஸ்தம்பித்தது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக தொடர்ந்து வந்த வண்ணமாக இருந்தனர்.
இந்த பேரணியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பேரணி சென்ற பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
அவர் கூறும்போது, “குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்களே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக