புதன், 25 டிசம்பர், 2019

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்- கொல்கொத்தா ....(வீடியோ

தினகரன் : கொல்கத்தா: ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற கூற்றுக்கு வானில் பறக்கும் விமானமும் விதிவிலக்கல்ல. இவ்வாறு மேற்கு வங்கத்தில் டிரக் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வழியில் பாலத்தில் சிக்கிக் கொண்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த, அஞ்சல்துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த போயிங் விமானம் ஒன்று, கைவிடப்பட்டு, பயன்பாடற்று கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர், உலோகங்களை பிரித்தெடுப்பதற்காக விலைக்கு வாங்கி உள்ளார்.
இதனை 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதை விமான நிலையத்தில் இருந்து டிரக்கில் ஏற்றி சாலை வழியாக கொண்டு சென்றுள்ளார். துர்காபூரில் சாலை வழியே சென்றுகொண்டிருந்த போது ஒரு மேம்பாலத்தின் அடியில் லாரி சிக்கிக் கொண்டது. விமானத்தின் உடல்பகுதி மேம்பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் தொழிலாளர்களுடன் சேர்ந்த அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக