செவ்வாய், 3 டிசம்பர், 2019

தீண்டாமை சுவர் ... எடப்பாடி பழனிசாமியின் கவுண்டர் ஜாதி ராஜ்ஜியம் ...


Mani Mathivannan : தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியென்று தோழர்கள் கண்டனம் எழுப்பினால் சிலர் துள்ளிக் குதித்து வந்து எது தீண்டாமை என்று கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து போய் முதல்வர் பதவி பெற்றதிலிருந்து மேற்கு மாவட்டங்கள் முழுவதிலும் ஆட்சியர், எஸ்பி ஆகிய இருவரில் ஒருவரோ அல்லது இருவருமேவோ கவுண்டர்களாக இருப்பது போன்ற ஏற்பாடு திட்டமிட்டு ஆட்சியாளர்களால் செய்யப் படுகிறது.
உதாரணத்திற்கு, ஈரோட்டில் கலெக்டர், எஸ்பி இருவருமே கவுண்டர்கள். கலெக்டர் பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தை தனது சாதிக் கோயிலுக்குத் தாரை வார்க்க, நீதிமன்ற உத்தரவையும் மீறி நடவடிக்கை எடுத்தார்.
வழக்கறிஞர் ரத்தினம் போன்றவர்கள் சரியான நேரத்தில் இடையீடு செய்ததன் முலம் அம்முயற்சி முறியடிக்கப் பட்டது.
எஸ்பிக்கு எதிராக மாவட்டத்திலுள்ள பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளன. எஸ்பி ஆர்எஸ் எஸ்ஸுக்குச் சார்பாகவும் சனநாயக சக்திகளை முடக்கும் விதத்திலும் செயல்படுகிறார் என்பது அவர்களின் புகார்.
அதுபோலவே நாமக்கல்லிலுள்ள கவுண்டர் எஸ்பி தனது சாதிக்கு ஆதரவானப் போக்குடன் செயல்பட்டு எங்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறார் என அம்மாவட்ட இளைஞர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

கோவையிலும் மாவட்ட நிர்வாகத்தில் கவுண்டர்களின் பங்கு என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
நடுநிலையாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களுக்கு ஸ்டாலினையும் திமுகவையும் பழி பாவத்தில் இணைக்க முடியுமா என்று பார்ப்பதைத் தவிர இது போன்ற செய்திகளின் மேலெல்லாம் அக்கறையில்லை.
ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
பிறகென்ன அருந்ததியர்கள், பிற எளிய மக்கள் கொத்து கொத்தாய்ச் சாகத்தானே செய்வர்? எடப்பாடியை பிற கவுண்ட மந்திரிகளைப் போய்க் குறை சொல்ல முடியுமா?
எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்?  முகநூல் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக