வியாழன், 5 டிசம்பர், 2019

பேரா .சுபவீ : பெரியார் திடல் இல்லையென்றால் காசி ஆனந்தனை தமிழகம் அறிந்திருக்குமா? வீடியோ


இரு அற்பர்களின் பேச்சை நான் கேட்டு கொண்டே வந்தேன் நம் ஆசிரியரை .அவரின் வயதுக்காக கூட மதிக்காமல் அவன் இவன் என்று அவர்கள் பேசினார்கள்!
எண்ணி பாருங்கள் 87 .வது வயதிலும் இத்தனை வசை மொழிகளை நாம் தாங்கி கொள்ளவேண்டி இருக்கிறது .இந்த சமுகத்தின் இழிவை நாம் துடைக்கவேண்டும் என்று கருதியதால் இந்த இழிவை நாம் சுமக்க வேண்டி உள்ளது .அதுதான் அடிப்படை
எத்தனை அறிஞர்கள் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் வெறும் இலக்கியம் மட்டும் பேசிவிட்டு போனால் .. அல்லது சட்டம் மட்டும் ஆசிரியர் பேசிவிட்டு போனால் இன்றைக்கு யாரும் அவரை பழிமொழி சொல்ல மாட்டார்கள்.
பேசுகிறபோது ஒருவர் குறிப்பிடுகிறார் தம்பி உதயநிதி ஆசிரியரை பற்றி பேசும்போது பேராசிரியர் என்று சொன்னாராம் ..
அவரா பேராசிரியர் ? நான் அவரா என்று கவனமாக சொல்லி இருக்கிறேன் . அவரகள் அப்படி சொல்லவில்லை.
அவரா பேராசிரியர் என்று கேட்கிறார்கள் .. உண்மைதான் அவர் பேராசிரியர் இல்லை .. எங்களை போன்ற பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் ..
தந்தை பெரியாருக்கு பின்னும் ஆசிரியர் என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்று பட்டியல் இட்டிருக்கிறார்களே அதுதான் காரணம்?
பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து போய்விடும் என்று நினைத்தவர்களுக்கு ஆசையில் மண்ணை போட்டுவிட்டரே அதுதான் காரணம்.

இன்றைக்கும் எல்லோரும் இந்த இயக்கத்தால் நாம் சுயமரியாதை பெற்றோம் என்பதை மறந்து போகிறார்கள் .
இந்த அரங்கம் நடிகவேள் எம் ஆர் ராதாவின் பெயரால் அமைந்திருக்கிற அரங்கம் ...
திராவிடர் கழக மாநாட்டில் குதிரையில் வெள்ளை கொடியோடு போகிறவர் நம் நடிகவேள் எம் ஆர் ராதா ... அந்த கம்பீரம் ...
இன்று காலை ஒரு சிறுபான்மை இன மக்களின் திருமணத்திற்கு போயிருந்தேன் .. அவர்கள்  மதம் சார்ந்த பாடலை பாடிக்கொண்டு இருந்தார்கள் நண்பர்களே
என்னை பார்த்தவுடன் அந்த பாடகர் சொல்கிறார் அய்யா சுபவீ வந்திருக்கிறார் அவருக்காக ஒரு பாடல் என்றுவிட்டு ஓடி வருகிறான் உதயசூரியன் என்று பாடுகிறார்  அது இஸ்லாமியர் வீடு திருமணம் ..
எந்த பாட்டு என் நரம்புகளில் சின்ன வயதில் முருக்கேற்றியதோ அந்த பாட்டை கேட்கும்போது மறுபடியும் எனக்கு வயது குறைந்து போயிற்று...
நடிகவேள் எம் ஆர் ராதாவின் செய்திகள் எல்லாம் எனக்கு உரமூட்டும்.
எனக்கு மிகப்பெரிய வருத்தம் இந்த இரண்டு அற்பர்கள் பேசிய பேச்சு அல்ல .
ஆனால் அந்த மேடையில் நம் ஈழத்து கவிஞர்  காசி ஆனந்தன்  அமர்ந்திருந்தாரே அது எனக்கு வருத்தம்  வேதனை அவமானம்!
இத்தனை இழிவான பேச்சுக்கள்  பேசப்படும் போது காசிஆனந்தன் அந்த மேடையில் இருக்கிறார் .
நம்முடைய  அய்யா கவி பூங்குன்றன் அவர்கள் அவரை சுற்றுப்பயணம் அழைத்து சென்றவர் .
திராவிடர் கழகம் இல்லையென்றால் .. கருப்புசட்டை இல்லை என்றால்  பெரியார் திடல் இல்லை என்றால் .....  காசி ஆனந்தனை தமிழகம் அறிந்திருக்குமா?   என்பதை காசி ஆனந்தன் அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும் !
அவர் பேசுகிறார் ..  உடல் முழுக்க காவி அணிந்திருந்த  குன்றக்குடி அடிகளாரை ஏற்று கொண்டீர்களே .. தோளில் மட்டும் காவி போர்த்திக்கொண்ட அர்ஜுன் சம்பத்தை ஏற்று கொள்ள கூடாதா ?
அடிகளார் மிகப்பெரிய அறிவாளி .. அவர் இறந்து போய் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு அவமானம் நேருகிறது.
அடிகளாரை யாரோடு ஒப்பிடுகிறீர்கள்?
அடிகளாரின் அறிவு என்ன அடிகளாரின் படிப்பு என்ன .. எங்கள் அய்யா பெயரார் மதித்த அறிவாளி அடிகளார்.
  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசியவற்றில் சில பகுதிகளை மட்டுமே இங்கு குறிப்பட்டு உள்ளேன்  முழு பேச்சையும் மேலே உள்ள கானொளியில் காணலாம் .....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக