div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உத்தரப்பிரதேசத்தில் பாலியல்
வல்லுறவால் பாதிக்கப்பட்ட23 வயதான பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட 23 வயதான
பெண் டெல்லி மருத்துவமனையில்வெள்ளிக்கிழமையன்று இரவு உயிரிழந்தார்.
உத்தரப்
பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில்
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து
எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகத்தின் பேரில், இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், ஐந்து ஆண்கள் தாக்கி அருகிலுள்ள வயலுக்கு இந்த பெண்ணை இழுத்து சென்று, தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னொரு பாலியல் வல்லுறவு வழக்கில் பெரிதும் பேசப்பட்ட உன்னாவ் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய பெண், கார் விபத்து ஒன்றில் கடும் காயமடைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு விசாரணையை காவல்துறை தொடங்கியது.
கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு தலைப்பு செய்தியாக வெளியாகி அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில், சமீபத்திய இந்த சம்பவம் இந்தியாவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக