வியாழன், 19 டிசம்பர், 2019

கேரளா 6 மணிநேர டார்ச்சர்; பிரம்படி; முகம் சிதைப்பு'- அட்டப்பாடி மதுவுக்கு நேர்ந்தை விட கொடுமை ஏழை அஜீஸுக்கு!

அஜீஸை தாக்கும் காட்சிகள்
கொல்லப்பட்ட அஜீஸ்.vikatan.com - மலையரசு : மனநலம் பாதிக்கப்பட்டதுபோல நடந்துகொண்ட அவர் உடல் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு காதில் காதணிகளை அணிந்துகொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்தார். இதனால் அவரின் தாயும், தங்கையும் அங்கிருந்து வேறுஇடத்துக்குச் சென்றுவிட்டனர். கடையில் உணவு திருடியதாக வயநாட்டைச் சேர்ந்த மது என்ற பழங்குடின இளைஞரை சிலர் கட்டிவைத்து அடித்துக்கொன்ற சம்பவம் கடந்த வருடம் அட்டப்பாடியில் நடந்தது. இதேபோன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சஜிமோன் என்பவர் கடந்த 11-ம் தேதி தம்பானூர் பஸ் ஸ்டாண்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். தூக்கம் கலைந்து எழுந்தபோது அவர் கைப்பையில் இருந்த இரண்டு செல்போன்களும், 40,000 பணமும் திருடுபோனது தெரியவந்துள்ளது.
< அதிர்ச்சி அடைந்த சஜிமோன் திருட்டு குறித்து பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் கூறியிருக்கிறார். தனது கைப்பையைத் திருடியவரின் அங்க அடையாளங்களாக காதில் தோடு அணிந்திருந்தவர்தான் திருடினார் என்கிற தகவலையும் சொன்னவர் அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் தான் வைத்திருந்த பணத்தில் பாதியைத் தருவதாகவும் உறுதிகொடுத்துள்ளார். அவ்வளவுதான் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் திருடியவனைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் எனக் கூறி விழிஞ்ஞம் முட்டக்காடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள போலீஸார், ``சஜிமோன் கூறிய அடையாளங்களுடன் அங்கிருந்த விழிஞ்ஞம் பகுதியில் இளைஞர் அஜீஸ் என்பவர் ஆட்டோ டிரைவர்களுக்குத் தெரியும். அவர்தான் செல்போன் மற்றும் பணத்தைத் திருடியிருப்பார் என நினைத்த டிரைவர்கள் அஜீஸை தேடிப்பிடித்து அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். திருவல்லம் பகுதியில் இருந்த அஜீஸ் வீட்டுக்கே அவரை ஆட்டோவில் தூக்கிச் சென்ற டிரைவர்கள் வீட்டின் உட்புறத்தில் அவரைக் கட்டிவைத்து, வெளியில் இருந்த மரத்திலிருந்து பிரம்பைக் பிடுங்கிவந்து தாக்கியுள்ளனர்.



அஜீஸை தாக்கும் காட்சிகள்



அஜீஸை தாக்கும் காட்சிகள்

பிரம்பு ஒடிந்தாலும் மீண்டும் மீண்டும் பிரம்பை பிடுங்கி வந்து அஜீஸை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், வெட்டுக்கத்தியை நெருப்பில் பழுக்கவைத்து பிறப்புறுப்பு, முகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சூடு வைத்துள்ளனர். தாக்குதலின்போது அஜீஸ் கத்திவிடக் கூடாது என்பதற்காக துணியை வைத்து அவரின் வாயைப் பொத்தியுள்ளனர்.




காலை 8 மணிக்கு அஜீஸை கட்டிவைத்து தாக்கத் தொடங்கிய டிரைவர்கள் மதியம் 2 மணிக்கு மேலே அவரை விடுத்துள்ளனர். சஜிமோனின் கைப்பை அஜீஸிடம் இல்லை என்பது தெரிந்த பிறகே அவரை விடுவித்துள்ளனர். தாக்குதலில் குற்றுயிரான நிலையில் இருந்த அஜீஸ், வீட்டில் இருந்தால் திரும்பிவந்து தாக்குவார்கள் என எண்ணி அருகில் உள்ள வாழைத் தோப்பில் தஞ்சம் அடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அஜீஸ் வாழைத் தோப்பில் இருக்கும்போது தெரு நாய்கள் அவரைத் துரத்தியுள்ளது.



கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்



கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
அப்போதுதான் அங்கிருந்தவர்கள் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். வாழைத் தோப்பில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததும் அவர் உயிரிழந்துவிட்டார். அஜீஸை ஆட்டோ டிரைவர்கள் தாக்கி ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை உள்ளூர்வாசிகள் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பணத்தைத் தொலைத்த சஜிமோன் ஆட்டோ டிரைவர்கள் ஜினீஷ் வர்கீஸ், அருண், சாஜன், சஹாபுதீன் என்ற ஐந்துபேரை கைது செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர்.





இதற்கிடையே கொல்லப்பட்ட அஜீஸ் குறித்து சில தகவல்களை அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். ``அஜீஸ் இளம் வயதுக்காரர் இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை. கான்க்ரீட் பணிக்குச் சென்றுவந்த இரண்டு ஆண்டுகள் முன்புவரை நன்றாகத்தான் இருந்தார். தங்கை மற்றும் தாய் உடன் வாழ்ந்துவந்த அஜீஸ், உடல்நலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றம் ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டதுபோல நடந்துகொண்ட அவர் உடல் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு காதில் காதணிகளை அணிந்துகொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்தார்.



கொல்லப்பட்ட அஜீஸ் (உள்படம் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜீஸ்)



கொல்லப்பட்ட அஜீஸ் (உள்படம் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜீஸ்)
இதனால் அவரின் தாயும், தங்கையும் அங்கிருந்து வேறுஇடத்துக்குச் சென்றுவிட்டனர். அதனால் தனிமையில்தான் எப்போதும் இருந்துவருவார் அஜீஸ். பசித்தால் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் சென்று யாசகம் பெற்று சாப்பிட்டுவந்தார். அங்கு அடிக்கடி அவரை ஆட்டோ டிரைவர்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவர் திருடியிருக்கலாம் என்று அடித்துள்ளனர். எப்போதும் அமைதியாகவே இருக்கும் அஜீஸ் இதுவரை எந்தத் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதில்லை" எனக் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக