வியாழன், 5 டிசம்பர், 2019

சூடானில் சிலிண்டர் வெடித்து 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு .. வீடியோ


Sudan, LPGTanker, Blast, Indians, சூடான், இந்தியர்கள், சிலிண்டர், விபத்து தினமலர்  : கார்டூம்: சூடான் தலைநகர் கார்டூம் நகரில் உள்ள டைல்ஸ் ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்ததில், 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் கார்டூம் நகரில் செயல்படும் டைல்ஸ் ஆலையில் 50 இந்தியர்கள் உட்பட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (டிச.,03) ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்து விபத்தானது. இதில், மொத்தம் 23 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் 6 தமிழர்கள் உட்பட 12 இந்தியர்கள் எனவும் , மற்றவர்கள் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அங்குள்ள இந்திய தூதரகம் அளித்துள்ள தகவலிலும் 23 பேர் இறந்ததாக கூறினாலும், அதில் எத்தனை இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அரசின் விசாரணையில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்தை தடுக்க முடியாமல் போனது தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக