வியாழன், 5 டிசம்பர், 2019

பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி

Vishnupriya R |டெல்லி: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பெண்ணின் தந்தை சந்தித்து பேசினார். மேலும் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கும் தொடர்புள்ளது என்று அவர் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் முக்கிய ஆதாரமாக இருப்பது அவர் செல்போனில் பதிவு செய்யயப்பட்டிருந்த தற்கொலை கடிதம் மட்டுமே. 
  அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்வதற்காக சென்னையிலுள்ள தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். பாத்திமாவின் செல்போனில் இருந்த ஆதாரம் மர்மத்தை கிளப்பியது. அதில் மூன்று பேராசிரியர்கள்தான் மீது பாத்திமா குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியையும் அப்துல் லத்திப் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பாத்திமா வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர்
செய்தியாளர்களை அப்துல் சந்தித்து பேசினார். உங்களுக்கு 62 வயசு.. எனக்கு 50.. கல்யாணம் பண்ணிக்கங்க.. தொந்தரவு செய்த பெண்.. சுட்டு கொன்ற டாக்டர்! அவர் கூறுகையில் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கு தொடர்பு உள்ளது. மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தேன். மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் அழித்துவிட்டது< .. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட்டேன் என தெரிவித்தார். /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக