மாலைமலர் :
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்து 17 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய
வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோயம்புத்தூர்
மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில், மழையால்
சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில்,
அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு
காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி
பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
சிதிலமடைந்து
உடைந்து விழும் நிலையில் இருந்த அந்தச் சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள்
கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாததாலேயே இந்த விபத்து
நிகழ்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் 17 பேர் இறப்புக்கு காரணமான சுற்றுச்சுவரை
கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று
கைது செய்தனர். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக