வெள்ளி, 8 நவம்பர், 2019

Demonetization பணமதிப்பு இழப்புக்கு பாஜக மட்டுமே காரணமா? அதிமுகவுக்கும் பங்கில்லையா? மக்களுக்களின் அறிவு எங்கே போனது? சமுகவலையில் எரிமலை...


Devi Somasundaram :       பணமதிப்பிழப்பு  பற்றி  பேசலயான்னு சில உடன்பிறப்புக்ள் கேட்டார்கள் .. ஏன் பேசனும்... யார்காக பேசனும்..டீமானிடைஷேஷனால பாதிக்கப் பட்டது திமுகவா மக்களா? ...அப்படி பாதிக்கப் பட்டவர்களுக்கு அது குறித்த தெளிவு என்ன இருக்கு ? .
நீட் தேர்வால மக்களின் கல்வி பாதிக்கப் படுவதையும், அதனால் தமிழகத்தின் சுகாதாரம் பாதிக்கப் படபோவதையும் தினம் எழுதுகிறோம்.
இதற்கு யார் காரனம்..பி ஜே பி மட்டுமா? ..எடப்பாடி அரசு காரணம் இல்லயா ? .. அதற்காக இந்த மக்கள் என்ன எதிர்ப்ப தெரிவித்தார்கள் ? .

தமிழக வேலை வாய்ப்பு வடக்கத்தியான்கிட்ட பறிபோகுதுன்னு தினம் எழுதுகிறோம்..இதற்கு காரணம் பி ஜே பி அரசா ? . எடப்பாடி அரசு இல்லயா ? ..இந்த அரசுக்கு என்ன அடிப்படையில் இடைத் தேர்தலில் ஓட்டு போட்டார்கள் .
பொள்ளாச்சி வன்புணர்வு குற்றவாளிகளை சரிவர சாட்சிகளை தராமல் தப்பிக்க விட்டது மோடி அரசா ? .பி ஜே பி அரசா ? .
தன் வீட்டு பெண் மானம் போவது பற்றி கூட கவலை படாமல் அதிமுகவுக்கு ஓட்டு போடும் இவர்களுக்காக எதை ஏன் பேசனும்..
ஸ்டாலின் டீமானிடைஷேஷன் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார் ..அதில் வந்த 50 பின்னூட்டத்தில் 45 பின்னூட்டம் மூல பத்திரம் எங்க என்று கேட்டு ? .
சரி ..யார் அவர்கள் என்று தேடி பார்த்தால் அவர்கள் தலித் அமைப்பை சேர்ந்தவர் யாரும் இல்லை .அத்தனை பேரும் தன்னை சாதியால் அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பும் பா ம க , நாதக, போன்ற் கட்சியினர் .
இவர்களுக்கு தலித் நிலத்தின் மீது அக்கறையா ...அப்படி என்றால் வன்னியர்கள், மற்றவர்கள் ஆகரமித்த பஞ்சமி நிலம் எவ்வளவு அல்லவா பேசனும்...ஏன் பேச வில்லை ? .

...ஓ பி சி யினரின் அதிகார பகிர்வு எல்லா பிரிவை கிட மிகக் குறைவு ..
தங்களுகாக இவர்கள் என்ன உழைத்தனர் ..இவர்கள் அதிகாரமின்மைக்கு யார் காரணம் .. திமுக வா ? . அல்லது அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக வா ? ...கல்வியில் அக்கறை இல்லாத அவர்களேவா ? .
பி ஜே பி யை விட ஆபத்தான கட்சி அதிமுக என்பதை இவர்கள் உணராத வரை இவர்கள் இப்படியே தான் இருக்கப் போகிறார்கள் .
யாரை அவர்கள் எதிர்க்கனும் ... எதை கேள்வி கேட்க்கனும்...அவர்களின் அதிகாரமின்மை பற்றி கூட அறியும் அளவு அறிவில்லாமல் அடிமை கூட்டமாய் வாழ்ந்து கொண்டு திமுக வை நக்கல் நையாண்டி செய்து விட்டதா நினைக்கும் அறிவிலிதனம் கொண்டவர்களிடம் டீமானிடைஷேஷன் பத்தி பேசி மட்டும் என்ன ஆகப் போகிறது .
அந்த அரைகுறைகளும் தான் காசு மதிப்பிழப்பில் தெருவில் நின்றனர் ...அதை பற்றி அவர்கள் தான் பேசனும் .. ஆனால் திமுக கிட்ட முட்டிகிறார்கள் .
காரணம் சாதி ....இவர்களுக்கு தன் வாழ்வாதாரம் போனாலும் சாதி இருந்தால் போதும் என்றால் இப்படியே அடிமையாவே இருக்கட்டும்...எடப்பாடியே ஆளட்டும் ..ஏன் மாறனும் ..
தனக்கு எது தேவை என்று அறிய இயலாத அளவு சாதி வெறி ஆட்டி வைக்கும் என்றால் ..அவர்கள் சூத்திர அடிமைகளாய் இருக்கட்டும். ..இவர்களுக்கு பேசி மட்டும் புரிஞ்சுடவா போகுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக