ஞாயிறு, 17 நவம்பர், 2019

பார்ப்பன பெண்களின் வாழ்வை உயர்த்தியது பெரியார் அண்ணா கலைஞர்! ... சங்கராச்சாரிகள் அல்ல ..

Kandasamy Mariyappan : பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கவனத்திற்கு;
சமீபகாலமாக, கலைஞர், பெரியார் போன்றவர்கள் சாதியை வைத்து அரசியல் செய்தனர் என்றும், பார்ப்பனர்களை மட்டுமே இழிவுபடுத்தி அவர்களது
அரசியல் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டனர் என்றும், RSS/BJPல் உள்ள சில சமூகவிரோத ஆண்கள் அனுப்பும் பதிவை படித்துவிட்டு, நீங்களும் கோபப்பட்டு அதனை உங்கள் நண்பர்களுக்கு Forward செய்வதாக கேள்விபட்டேன்.
உண்மையில், உங்கள் வீட்டு பூசை அறையில் சங்கர மட காஞ்சி சங்கரன், மன்னார்குடி, திருவில்லிப்புத்தூர் ஜீயர்களின் Photoவை வைத்திருப்பதை விட
பெரியார், அண்ணா, கலைஞர் படங்களைத் தான் வைத்திருப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும்.
காரணம்,
முன்பு, சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுவதால், சிறுவயது கணவன் இறந்த பிறகு, பல பெண்கள் கைம்பெண்களாக (widow) வாழ்க்கையை கழித்தனர். அந்த கைம்பெண்களும், அந்த வீட்டில் இருந்த மாமனார், கொளுந்தனார் (கணவனின் சகோதரர்கள்) போன்றவர்களின் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானார்கள். நான் பொய் சொல்லுகிறேன் என்று எண்ணினால், உங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பாட்டிகளை கேட்டுப் பாருங்கள், புரியும். மேலும், அந்த கைம்பெண்களுக்கு மொட்டை அடித்து, வெள்ளையாடை அணிவித்து, மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். பூ, பொட்டு இடக்கூடாது என்று அமங்களமாக இருக்க வைக்கப்பட்டார்கள்.
காஞ்சி சங்கரனும், திருவில்லிப்புத்தூர் ஜீயரும்
1. பெண்கள் படிக்க கூடாது என்றனர்.
2. பெண்கள் வேலைக்கு போகக்கூடாது என்றனர்.
3. வேலைக்கு செல்லும் பெண்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், விலைமாது போன்றவர்கள் என்றனர்.

4. பெண்கள் அடுப்பங்கரையில் தான் இருக்க வேண்டும் என்று கூறியவர்கள்.
சமீபத்தில் கூட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கூறினார். ஆனால் Me too group காதுகளில் விழவில்லை, கண்களுக்கும் தெரியவில்லை, பாவம்.
அதேவேளையில், காஞ்சி மடத்திற்குச் சென்ற அணுராதா ரமணனை பாலியல் தொல்லை கொடுத்தவர் காஞ்சி சங்கரன்.
ஆனால், பெரியார்
1. குழந்தை திருமணத்தை எதிர்த்து போராடியவர்.
2. கைம்பெண்கள் (Widow) மறுமணத்தை ஊக்குவித்தவர்.
3. பெண்கள் படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றவர்.
4. பெண்களுக்கு சொத்துரிமையை வழங்க கூறியவர்.
5. பெண்களின் கையிலிருந்த ஊதாங்குழலை பிடுங்கி வீசிவிட்டு, புத்தகத்தையும், பேனாவையும் தினித்தார்.
கலைஞர்,
1. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கியவர்.
தமிழ்நாட்டில், 31% OC Categoryல் 33% அதாவது 10.5% பெண்களுக்கு வழங்க சட்டம் இயற்றியவர். அதனால் இன்று நிறைய பார்ப்பண சமூகப் (FC) பெண்கள் படிக்க மற்றும் வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
2. பெற்றோர்கள் சொத்தில் சம உரிமை பெண்களுக்கு தர வேண்டும் என்று சட்டம் இயற்றியவர். உங்கள் அண்ணன், தம்பிகள் மறுக்க முடியாது.
3. பெண்களின் அரசியல் ஈடுபாட்டை ஊக்குவிக்க, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியவர்.
மேலும் அந்த RSS/BJP சமூக விரோதிகள், அவர்களுடைய அறிவில்லா நிலையை மறைக்க, இடஒதுக்கீட்டால் வேலை கிடைக்கவில்லை என்று பொய் சொல்லுகின்றனர். நீங்களும் நம்புகிறீர்கள்.
SC - 18% (15%)
ST - 1% (7.5%)
MBC - 20% (0%)
BC - 30% (27%)
OC - 31% (50.5%)
கட்டத்திற்குள் இருப்பது மத்திய இடஒதுக்கீடு.
3% உள்ள உங்கள் மக்கள் 31% (50.5%) இடங்கள் இருந்தும், அந்த இடத்தில் கல்வியையோ, வேலையையோ பெற முடியவில்லை என்றால், அறிவு இல்லை என்றுதானே அர்த்தம்.
இப்பொழுது கூறுங்கள் சாதி, பெண்ணடிமைத்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தியது சங்கர மடங்களா!
பெரியார், கலைஞரா!
இன்றுதான், (13.11.1938)
பெண்கள் மாநாட்டில் பெண்களால்,
மரியாதைக்குரிய ஈ.வே.ராமசாமி அவர்களுக்கு, பெரியார் என்று பட்டம் சூட்டப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக