வியாழன், 14 நவம்பர், 2019

கைதியை சுட்டுக்கொன்ற போலீஸ் காளிதாசுக்கு ஆயுள் தண்டனை ..சையது முகமதுவை சுட்டு கொன்ற ராமநாதபுரம் எஸ் ஐ ....

தினமலர் : ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்டம் எஸ்பி., பட்டனத்தில் கைதியை சுட்டு கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 அக்டோபர் 14 ல் சையது முகம்மது என்ற ஒரு நபரை விசாரிப்பதற்காக எஸ்.பி., பட்டனம் போலீசார் அழைத்து சென்றனர். இவரை ஸ்டேஷனில் வைத்து விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ், சையதுவை லத்தியால் அடித்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சையது சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எஸ்.ஐ., சுட்டது தவறு என கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சண்முகசுந்தரம், எஸ்.ஐ., காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை எஸ்.ஐ.,யிடமே வசூலிக்குமாறும் உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக