சனி, 2 நவம்பர், 2019

பெரியார் மணியம்மையை திருமணம் செய்த உண்மை காரணம் இதுதான்

Anbarasan Thanjai Anbarasan Jayaraman.: மணியம்மை பிறப்பு - 1920
மணியம்மை பெற்றோர் இறப்பு - 1942
மணியம்மை திருமணம் - 1949
மணியம்மை 22 வயது வரை பெற்றோருடன் இருந்தார் அதன் பின் இயக்கத்துக்கு வந்தார்
29 வயதில் இணையேற்ப்பு - 7 வருடம் இயக்கத்தில் மக்கள் தொண்டாற்றினார்... வளர்ப்பு மகள் இல்லை

திருமணத்தின் போது இருந்த வயது வித்தியாசத்தை மட்டுமே வைத்து..
மணியம்மையின் போராட்டங்கள் தேசிய அளவில் கவனத்தை திருப்பியவை... பெண் எனும் ஒரே காரணத்திற்காக அவரை பற்றிய உண்மைகளை இந்த சூத்திரர்கள் இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்...
சுமார் 38 ஆண்டு காலமாக தன் முதல் மனைவியை மரியாதையுடனும் காதலுடனும் பார்த்த பெரியார்... அந்த மனைவி இறந்தவுடன் வேறு ஒருவரை தேடிஇருக்கலாம்... ஆனால் அதை செய்யாமல் சமூக தொண்டினையே பெரிதாக கருதினார்...
வலதுசாரிகள் குறிப்பிடுவதை போல பெரியார் காமத்திற்காக தான் இரண்டாம் திருமணம் செய்தாரா..? உலகில் பிற நாடுகளை சுற்றி பார்த்து.. பிற கலாச்சாரங்களை கவனித்த பெரியார்... திருமணத்தையும் செக்ஸ்ஸையும் சேர்த்தி பார்க்கும் அளவிற்கு முட்டாளில்லை... அவருக்கு அது தேவை என்றால் அதற்கு சம்மதிக்கும் யாருடன் வேண்டுமானாலும் அவர் அந்த உறவை வைத்திருக்கலாம்... அதற்கு திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

வேறு என்ன தான் காரணம்..?
எனக்கு தெரிந்து இதற்கு ஒரே காரணம் தான்
பெரியாருக்கு பிறகு அந்த இயக்கத்தையும் அதன் சொத்தையும் பாதுகாத்து மக்களை வழிநடத்த ஒரு ஆண் கூட அப்போது இல்லை...
1949 ல் 70 வயதான பெரியாருக்கு எவ்வளவு தூரம் யோசித்தாலும் தகுதியான ஆண் என்று ஒருவரும் இல்லை...
 இங்கு சமூக மாற்றம் என்பது பெண்களாலே சாத்தியப்படும் என்பதை முழுவதும் நம்பினார்... அதுதான் உண்மையும் கூட.. இங்கு நல்லதோர் மாற்றம் என்பது பெண்களாலே சாத்தியப்படும்...
அவரின் போதாத காலம்... 70 வயது தாண்டியும் 94 வயது வரை வாழ்ந்து இந்த துரோகிகளிடம் மாராட முடியாமல் குமுறி குமுறியே செத்துப்போனார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக