வியாழன், 7 நவம்பர், 2019

காமராஜரை நேருவா கண்டுபிடிச்சாரு .. இல்ல வெள்ளைக்காரனா கண்டு பிடிச்சாங்க? அமரர் இரா.வெற்றிகொண்டான் பேச்சு ... வீடியோ


ராஜாஜி கல்கத்தாவில கவர்னராகவும் இருந்தாரு  இங்கே முதலமைச்சராகவும் இருக்கிறாரு ..    அப்பத்தான் பெரியாறு நினைசாரு ..
அடேய் இவனுக குடுமியையும் பிடிசுகிரானுக  காலையும் பிடிசுக்கிராணுக .  இதுக்கொரு வழி பண்ணல இனிமே இந்த ஜனங்களை காப்பாத்த முடியாது ..
அப்போ ஒரு கோஷத்தை கொண்டுவாறாரு ... பச்சை தமிழன் ஆட்சியை கொண்டுவருவேன் .
பண்டித நேருவா காமராஜரை கண்டுபிடிச்சாரு ? இல்லை வெள்ளைக்காரனா கண்டு பிடிச்சாங்க ?
காமராஜர் என்ற ஒரு தலைவரை விருதுநகர்ல போயி  வா இங்க .. இந்த பார்ப்பனுங்களுக்கு கோட்டையில போயி எவன் முத்திரை தாள் குத்திட்டு இருக்கானோ அவனை கீழ இறக்கணும்னா அது உன்னை வச்சுதான் இறக்குனும் வா .
பெரியார் கொண்டுவந்த சீதனம்தான் காமராஜர் என்கின்ற தலைவனேதான் தவிர , பெரியார் உருவாக்கிய ஆட்சிதான் காமராஜர் ஆட்சியே தவிர ...
ஒரு பெரிய புரட்சி பண்ணாம பெரிய போராட்டம் பண்ணாம இவனுகளை ஒட்டுமொத்தமா தூக்கி கடாசனும்னா காமராஜர்தான் ஒரே துருப்பு சீட்டுன்னு கூட்டிட்டு வந்தார் .
குடியாத்தம் இடைதேர்தல்ல நில்லு .. நான் வந்து பார்த்துக்கிறேன் ..
காமராஜர் சொன்னார் .. : நான் ரொம்ப பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில பிறந்தவன் .. நாடார் சமுதயத்தில பிறந்தன் .. ராமநாதபுரம் ஜில்லாவில பிறந்த என்னைய போயி வட ஆர்காட்டுல ஜில்லாவில நிக்க சொல்றீங்களே எனக்கு யார் ஒட்டு போடுவா ?  ..  அங்க இஸ்லாமியர்களும் முதலியார்களும்தான் அதிகம் .. எனக்கு என் ஜாதிக்கு யார் ஒட்டு போடுவா
 அப்ப இருக்கிற நிலைமையை பாருங்க .. கண்ணீர் விட்டு அழலாம் இந்த இனமே அழுலாம் ... அந்த ஜாதிஉணர்வால எவ்வளவு அழுத்தபட்டிருப்பார் .. அவர்இருதயத்தில இருந்து அந்த வார்த்தை வெடிச்சு ...

அப்பத்தான் பெரியார் சொன்னார் கடவுளையே கட்டுக்குள்ள  வச்சிருக்கேன்  கவலை படாத .. போ .. உன்ன வெற்றி பெற வைக்கறதுன்னு எனக்கு தெரியும் ..
பெரியார் பேச்சை கேட்டுத்தான் காமராஜர் குடித்தத்தில நின்னார் .
தமிழர்கள் எல்லாம் காமராஜரை ஆதரிங்கன்னு பெரியார் ஒரு அறிக்கை விட்டார் .
அதற்கு பின்னாலதான் அண்ணா திராவிட நாடு பத்திரிகைல ஒரு அறிக்கை விட்டார் :
திராவிட முன்னேற்ற கழதில இருக்கிற எல்லோரும் எழுந்து நின்று போராடவேண்டும் ..
குணாளா..  அண்ணா சொன்னன வார்த்தை ; குணாளா    மணாளா .. குலக்கொழுந்தே   சென்றுவா குடியாத்தம்   வென்று வா கோட்டைக்கு ..
எல்லோரும் வேலை செய்தார்கள் ... காமராஜர் வெற்றி பெற்றார் . ராஜாஜி உட்கார்ந்த நாற்காலியில் ஒரு பச்சை தமிழன் காமராஜர் உட்கார்ந்தார் .
அவர் பெரியாரை பார்த்து கேட்டார்
முதல் கையெழுத்தை நான் எதில் போட?
அப்பொழுதான் பெரியார் சொன்னார் :
ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை இந்து அறநிலைய அமைச்சராக்கி அதில முதல் கையெழுத்தை போடு என்றார் .
அன்றைக்குத்தான் பரமேஸ்வரன் என்ற ஒரு இளைஞனை இந்து அறநிலைய துறை அமைச்சராக்கி நாற்காலியில் உட்கார வைத்தார் .
இதற்கு அடுத்த நாள் திராவிட நாடு பத்திரிகையில் அண்ணா எழுதினர் :
பரமேஸ்வரனின் வருகை கண்டு தில்லை நடராஜனும்  . ஸ்ரீ ரங்க ரங்கநாதனும் பதறி துடிக்கும் காட்சி கண்டேன் அந்த மாட்சி கண்டேன் .
அதற்கு அடுத்த நாள் பம்பாயில் இருந்த அம்பேத்கார் சொனார் :
என் இனத்தில பிறந்தவனை குலத்தில பிறந்தவனை குளத்திலே குழிக்கவும் விடமாட்டேன் என்கிறார் குனிந்து தண்ணி அள்ளி குடிக்கவும் விடமாட்டேன் என்கிறான் . ஆனால் பெரியார் பிறந்த மண்ணிலேதான் என் இனத்தை சார்ந்தவன் ஆண்டவனின் மூல விக்கிரகதுக்குள்ளே போய்கின்ற அதிகாரத்தை பெற்றுவிட்டான் ..
பெரியார் வாழ்க என்று அம்பேத்கார் கோஷம் போட்டார் ... !

மூத்த தலைவர் திருச்சி வெற்றிகொண்டான் அவர்களின் பேச்சில் சில பகுதிகளை மட்டுமே குறிப்பாக எழுதியுள்ளேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக