செவ்வாய், 26 நவம்பர், 2019

மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா ... பெரும்பான்மை இல்லை

பெரும்பான்மை இல்லை - மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமாமாலைமலர் : மகாராஷ்டிரா சட்டசபையில்
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பட்னாவிஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பை சந்தித்து தோல்வியை சந்திப்பதற்கு பதில், பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் வெளியாகின. > இந்நிலையில், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக- சிவசேனா கூட்டணிக்கே மக்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர். இடங்களின் எண்ணிக்கையை கொண்டு பேரம் பேசத் தொடங்கியது சிவசேனா.

சிவசேனாவை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. நாங்கள் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என வாக்குறுதி தரவில்லை. ஆட்சி அமைப்பதற்காக சிவசேனாதான் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியது.

இதையடுத்து, முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்ப உள்ளேன் என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக