திங்கள், 4 நவம்பர், 2019

பிரியங்கா காந்தி மொபைலுக்கும் அலர்ட் வந்தது!' - வாட்ஸ்அப் உளவு விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்

.vikatan.com -- ராம் பிரசாத் : நாடாளுமன்றத்
வாட்ஸ் அப்தேர்தலுக்கு முன்பாக செல்போன்களை ஹேக் செய்ய சட்டவிரோத ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது ஆவணங்கள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலி வாட்ஸ் அப். மெசேஜ், வாய்ஸ் சாட், வீடியோ காலிங், க்ரூப் மெசேஜ் என வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து சேவை வழங்குவதால் வாட்ஸ் அப்பின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரித்தது. எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்த வாட்ஸ் அப்பில் ஹேக்கர்களின் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவல் கடந்த மே மாதம் வெளிவந்தது.
வாட்ஸ் அப் மூலம் ஸ்மார்ட் போன்களில் ஹேக்கர்களின் ஊடுருவல் இருக்கிறது. உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது வாட்ஸ் அப். இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் NSO Group என்ற நிறுவனத்தின் `பெகாசூஸ்’ (Pegasus) ஸ்பைவேர் சாஃப்ட்வேர் மூலம் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் இஸ்ரேலின் NSO நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் ஸ்பைவேர் மூலம் 1400-க்கும் மேற்பட்ட பயனாளர்களை வாட்ஸ் அப் மூலம் கண்காணித்ததாக குற்றம்சாட்டியது வாட்ஸ் அப் நிறுவனம்.

இதுகுறித்து பேசிய வாட்ஸ் அப் நிறுவன செய்தி தொடர்பாளர், ``இந்த 1400 பேரில் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது”என்றார். இந்நிலையில் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் ஸ்பைவேர் தாக்கியுள்ளது. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் 'வாட்ஸ்-அப்' தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, பா.ஜ.க அரசு சட்டவிரோதமாக உளவு பார்த்திருக்கிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக செல்போன்களை ஹேக் செய்ய சட்டவிரோத ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது ஆவணங்கள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். பா.ஜ.க அரசு இதைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிறது. பா.ஜ.க அரசு மக்கள் புதிய பெயர் வைக்கத் தொடங்கியுள்ளனர். அது `பாரதிய உளவாளி கட்சி'. இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக