சனி, 9 நவம்பர், 2019

நடிகை பூஜா குமார் கமலஹாசன் வீட்டில் வசிக்கும் வாய்ய்பை பெற்று இருக்கிறார் ....?

Rebel Ravi : · ஹாலிடே இன்னும்..ஒரு பெண்ணும்...
அப்போது விஐபி படத்தின் கதைவிவாதத்திற்காக நானும் பிரபுதேவாவும் மும்பை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்கியிருந்தோம்.
அதேநேரத்தில் கதைக்கான நாயகியும் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.
ஒரு மாலை நானும் பிரபுவும் Holiday Inn ரெஸ்டாரண்ட்டில் வந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.
அப்போது தூரத்தில் ஓர் அழகான பெண் இருப்பதை நான் பார்த்தேன். பிரபுவிடம் கூறினேன்.
அந்தப் பெண் நடிக்க வருவாரா.. கூப்பிட்டுப் பார்க்கலாமா என நான் யோசிக்கையில் போய்க் கூப்பிடுங்கள் ரவி என்று தைரியம் அளித்தார் பிரபு.
எனக்கு சற்று பயம். ஏன் என்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் வந்து உணவு அருந்துகிற பெண் என்றால் பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும். நடிக்க வருகிறீர்களா என நான் போய்க் கூப்பிட்டால் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று தய்ங்கினேன்.
அப்போது பிரபு கவலைபடாதீர்கள் நான் இருக்கிறேன் என்னை காட்டுங்கள் என்றார்.

நான் தயங்கி தயங்கி அந்த பெண்ணிடம் போனேன். பேச ஆரம்பித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு நாங்கள் நாயகி தேடிக்கொண்டிருக்கிறோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாயகியாக நடிப்பீர்களா என்று கேட்டேன்.
அவர் ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்தார். பிரபுதேவாவின் மிகப்பெரிய விசிறி நான் அவரை பார்த்தாலே என் ஜென்ம சாபல்யம் அடையும்.. அவருடன் நடிப்பது என்றால் மாபெரும் விஷயம் என்றார்.
அப்போது தான் அவருடைய பேச்சில் அமெரிக்க ஆக்சன்டைக் கவனித்தேன். இவர் ஒரு என்ஆர்ஐ என்பதை புரிந்து கொண்டேன்.
உடனே நான் பிரபுதேவாவிடம் அவரை அழைத்து வந்து, பிரபுதேவாவுக்கு அறிமுகம் செய்தேன். அவர் நடிக்க ஆவலாய் இருப்பதாகவும்,, அமெரிக்காவில் மிஸ் இந்தியா என்கிற ஏதோ அட்டம் வங்கியதாஅக்வும் கூறினார்.
அந்த அம்மையாரின் எண்ணை வாங்கிக்கொண்டு கலைப்புலி தாணு சாரிடம் பேசி ஓர் அழகான பெண்ணைப் பார்த்தோம் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவரிடம் பேசிப்பார்த்தேன். அவர் நடிக்கத் தயாராக இருக்கிறார்.
நீங்கள் இயக்குனர் சபாவிடமும் கேமராமேன் ஆர்தர் வில்சனிடமும் பெண்ணின் புகைப்படத்தை காட்டி அவர்களுக்கு ஓக்கே என்றால் அட்வான்ஸ் கொடுத்திடலாம் என்று கூறினேன்.
பெண்ணின் போட்டோக்களை நான் வாங்கி அனுப்பினேன்.
அவரைச் சென்னைக்கு வருமாறு அழைத்தார்கள்.
எங்களது செலவிலேயே டிக்கெட் போட்டு அவரையும் அவரது தாயையும் சென்னைக்கு அனுப்பி வைத்தோம்……..
ஆனால் சென்னையில் அவரை பார்த்து போட்டோ ஷூட் செய்த கேமராமேன் ஆர்தர் வில்சன் அவரது வாய் சரி இல்லை அதனால் சரிப்பட்டு வரமாட்டார் என்று கூறி அவரை ரிஜக்ட் செய்து விட்டார்.
எனக்கும் பிரபுவுக்கும் வருத்தம் தான் இருந்தாலும், என்ன செய்வது கேமரா மேனுக்கும் இயக்குநருக்கும் அவரைப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது..விட்டுவிட்டோம்.
நான் அந்த அம்மையாரிடம் மன்னிப்பு கோரினேன். சும்மா சாப்பிட வந்தவருக்கு சினிமா ஆசை காட்டி.பின்னர் ஏமாற்றி விட்டோமே என வருத்தப் பட்டேன்.
அதற்கு பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை.
ஆனால் பின்னாளில் அவர் இன்னொரு சிறிய படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அப்படியே காணாமல் போனார்.
இப்போது மீண்டும் ஒரு சின்ன ரவுண்டு வருகிறார்.
அண்மையில் கமல்ஹாசன் அவர்கள் குடும்பத்தோடு அவரைப் பார்த்தேன் எனக்குச் சிரிப்புதான் வந்தது.
எங்கேயோ டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை நான் சினிமாவுக்கு வா என்று அழைக்க, அவருக்கு தமிழ் சினிமா அறிமுகம் ஆக, எங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு வராமல் போனாலும் கூட தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடிக்க….
இப்போது கமலஹாசனின் வீட்டிலேயே இருக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற அந்தப் பெண் வேறு யாருமில்லை பூஜா குமார் தான்…
ரெபெல்ரவி
09/11/19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக