வெள்ளி, 1 நவம்பர், 2019

மார்பகம் ஒரு கவர்ச்சிப் பொருளா? கலாச்சாரம் ? ...சமுக வலையில் பரவும் கருத்துக்கள்

Kalpana Ambedkar :  சமுக வலைத்தங்களில் தற்போது  அனைவராலும்
பகிரப்பட்டு வரும்  ஒரு புகைப்படம் இது.
ஆடைக்கு பின்னால அரசியல், ஆதிக்கம்,சாதியல் அடக்குமுறை, ஆணாதிக்கம் இப்படி நிறைய விசயங்கள் இருக்கு
உடை என்பது ஆதி மனிதன் குளிருக்கும், மழையைக்கும், பூச்சிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இலைத்தழை, மிருகத்தின்தோல் கொண்டு தன்னை . பின் அறிவாற்றல் தொடங்கிய பின் அதை பருத்தி, பட்டு பூச்சிகள் போன்றவற்றின் மூலம் துணிகளை நெய்ய தொடங்கி உடைகள் தான் மனிதனின் நாகரீகம் என்று வியாபார முதாலித்துவத்தை அங்கே தொடங்கினான் ஆதிக்க என்னமும் அங்கே உதிக்க தோன்றியது சாதிய பாகுபாடுக்கு வழி வகுத்தது பின் ஆண் பெண் மீதான ஆதிக்கத்திற்கு பயன்படுத்தினான் அதை அழுத்தமாக கொண்டு பெண்ணை அடிமையும் படுத்தினான்.
இன்றைய காலகட்டதிலும் ஆடை தான் கலாச்சாரம் என்று போலி பின்பத்தை பல நாடுகள் உருவாக்கி அதன் வழியே மக்களை/ பெண்களை அடிமை படுத்தி கொண்டிருக்கிறது
பல மேலை நாடுகள் ஆடை என்பது தான் கலாச்சாரம் அல்ல என்று உணர்ந்து விட்ட நிலையிலும் இங்கே இன்னும் ஆண் பெண் பேதம் மாறவில்லை . இன்னும் ஆண் மார்பகம் ஒரு அங்கமாகவும் பெண்ணின் மார்பகம் மட்டும் கவர்ச்சி பொருளாகவே பார்க்கபடுகிறது அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் கூறவே வேண்டாம்


ஆக அது கவர்ச்சி பொருளாகவே இங்கே மயபடுத்துவதின் விளைவு தான் ஆண் மேல் சட்டை அணியாமல் சென்றாலும் ஒருவரும் குறை சொல்ல மாட்டார்கள்.
ஆனால் ஒரு பெண் இங்கே மேல் சட்டை அள்ள உள்ளே அணியும்  Bra_Innewear அணியவிட்டால் அவளை கண்களால் பூசித்தும் விட்டு, கொச்சையும் படுத்துவார்கள் கேவலமான பட்டங்கள் சூட்டுவார்கள் ஐட்டம், தேவிடியா, அடங்காபிடாரி இப்படி இன்னும் பல
இதில் வேதனைகுறிய விசயம் என்னவென்றால் இந்த பட்டங்களை ஆண்கள் மட்டுமே தரவில்லை பல பெண்களே கூட பெண்களுக்கு கொடுக்கிறார்கள்.
இன்னமும் ஆப்ரிக்கா பழங்குடிகளான ஹிம்பா மக்கள், அமேசான் பழங்குடிகள் அவா மக்கள், அமெரிக்க இன பிரேசிலியன் மக்கள் இப்படி இன்னும் பல பழங்குடிகள் ஆண் பெண் பேதமின்றி மேலாடை இன்றிதான் வாழ்கிறார்கள் அதற்காக அவர்களின் கலாச்சாரம் அழிந்து விட்டதா இல்லை அங்கே ஒழுக்கம் என்பது சீர்குலைந்துவிட்டதா.
நாம் அவர்களில் இருந்து நாகரிகம் அடைந்து விட்டதாக கர்வம் கொள்கிறோம் சுத்த பேத்தல் அது.
ஆடை என்பது கலாச்சாரம் அல்ல கலாச்சாரம் என்பதே கிட்ட தட்ட பெண்களை அடிமைபடுத்தும் ஒரு ஆயுதம் தான்.
நம் பார்வையில் தான் இங்கு உள்ளது அனைத்துமே.
நம் பார்வை மாற இன்னும் பல நூறு ஆண்டுகள் தேவைப்படும் போல.
என்று பெண்ணின் மார்பு கவர்ச்சி பொருளாக இல்லாமல் அங்கமாக பார்க்க படுகிறதோ அன்று உலகளாவில் பாலியல் வன்புணர்வு மிகவும் குறைந்திருக்கும்.
ஆணின் மார்புக்கும் பெண்ணின் மார்புக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் குட்டிக்கு உணவாற்ற பால் சுரப்பது ஒரு வேலை ஆணுக்கும் சுரந்திருந்தால் கவர்ச்சி பொருளாக மாறியிருக்காதோ என்னவோ...
- #Mkishore_Kumar
Via கார்த்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக