புதன், 6 நவம்பர், 2019

உத்தர பிரதேச ஆசிரியரை கடுமையாக தாக்கிய மாணவர்கள் .. மாணவிகளிடம் தவறாக நடந்ததை தட்டி கேட்டாராம் வீடியோ

  தினத்தந்தி:   உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பல்கரான்பூர் பகுதியில் ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதனால் ஆசிரியர் அவர்களை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாதுகாவலர்களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டைகளை கொண்டு அடித்ததில் ஆசிரியர் தரையில் விழுந்து உள்ளார். இதன்பின்பும் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதுபற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்று செய்தியாளர்களிடம் பிரயாக்ராஜ் எஸ்.பி.யான என்.கே. சிங் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக