சனி, 30 நவம்பர், 2019

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலேயே இன்னொரு பெண் உடல் கண்டெடுப்பு


tamil.oneindia.com - shyamsundar : ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட இடத்திலேயே இன்னொரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் சரியாக 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணின் மூக்கை மூடி கொலை செய்து, பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு இருக்கும் சித்தல்குட்டா என்ற பகுதியில்தான் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் இன்னொரு உடலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று அந்த இடத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உடல் குறித்து போலீசுக்கு எந்த விதமான க்ளூவும் கிடைக்கவில்லை. இந்த உடலை தற்போது போலீசார் பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே இதில் மர்மம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரணம் பெரும்பாலும் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். பெண் மருத்துவர் கொல்லப்பட்டது போலவே இந்த சம்பவம் நடந்து இருக்க வாய்ப்புள்ளது. அதனால் கைது செய்யப்பட நான்கு பேரையும் இது தொடார்பாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக