செவ்வாய், 12 நவம்பர், 2019

மயங்கி விழுந்து பள்ளியிலேயே மாணவி உயிரிழப்பு .. அதிர்ச்சியில் கரூர்!

plus two female student dies in karur tamil.oneindia.com - hemavandhana : முகம் கழுவ சென்ற பிளஸ் 2 மாணவி.. திடீரென மயங்கி விழுந்து பள்ளியிலேயே மரணம் கரூர்: முகம் கழுவுவதற்காக பாத்ரூம் சென்ற பிளஸ் 2 மாணவி கோமதி.. அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.. அரசு பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கரூரில் பசுபதிபாளையத்தில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள்தான் கோமதி. அங்கிருந்த அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கொஞ்ச காலமாக கோமதிக்கு உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் நிறைய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்று வந்தனர். தொடர்ச்சியாக ஆஸ்பத்திரிக்கு சென்று வரவும், ஸ்கூலுக்கு நிறைய நாள் செல்லாமல் இருந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்புதான் உடம்பு சரியானதாக தெரிகிறது. அதனால் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளார். இந்நிலையில், கிளாஸ் ரூமில் உட்கார்ந்திருந்த கோமதிக்கு திடீரென தலைசுற்றுவது போல இருந்துள்ளது. இதனால் டீச்சரிடம் சொல்லிவிட்டு முகம் கழுவுவதற்காக பாத்ரூம் சென்றிருக்கிறார். ஆனால், அங்கேயே கோமதி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து பதறிய மாணவிகள் ஓடிச்சென்று ஆசிரியையிடம் சொன்னார்கள்.
ஆசிரியைகள், கோமதியின் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், கோமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். அதற்குள் துடிதுடித்து ஓடிவந்த கோமதியின் பெற்றோர், மகளை கண்டு கதறி அழுதனர்.

கோமதியின் உடல் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து பசுபதிப்பாளையம் பகுதி மக்களே அங்கு திரண்டு விட்டனர். உறவினர்கள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என மொத்தமாக திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
விஷயம் அறிந்து மாவட்ட கலெக்டர் அன்பழகனும் வந்துவிட்டார். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் இறப்பு குறித்து ஆசிரியர்களுடன் விசாரணை நடத்தியதுடன், இறப்புக்கான காரணம் என்ன என்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார். காலையில் ஸ்கூலுக்கு வந்த மாணவி, இப்படி திடீரென உயிரிழந்தது கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக