புதன், 20 நவம்பர், 2019

இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

இலங்கை, பிரதமர், ரணில் விக்கிரமசிங்கே, ரணில், மகிந்த ராஜபக்சே, ராஜபக்சே, கோத்தபய, கோத்தபய ராஜபக்சே, இலங்கை அதிபர், தினமலர் : கொழும்பு : இலங்கை பிரதமராக, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேயை, நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நேற்று முன்தினம்(நவ.,18) அவர் அதிபராக வெற்றி பெற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, ரணில் பதவி விலகலாம் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து , இன்று (நவ.,20) ரணில் தனது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, அதிபர் கோத்தபயாவிற்கு அனுப்பி வைத்தார்.

 இந்நிலையில், இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அவர், விரைவில் பதவியேற்பார் என தெரிகிறது.
மகிந்த ராஜபக்சே, கடந்த 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார். சிறிசேன, இலங்கை அதிபராக இருந்த போது, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை பிரதமராகநியமித்தார். ஆனால், நீதிமன்றம் சென்ற ரணில், மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக