திங்கள், 18 நவம்பர், 2019

பெரியார் - #ArrestRamdev பாபா ராம்தேவுக்கு எதிராக இந்திய அளவில் டிரெண்ட் ஹேஷ்டேக் வீடியோ


பெரியார்பாபா ராம்தேவ் விகடன்:  பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு!- பாபா ராம்தேவுக்கு எதிராக இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக் பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய பாபா ராம்தேவ்வை கைதுசெய்ய வேண்டும் என ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பாபா ராம்தேவ்வை கைது செய்யுங்கள்... பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணியுங்கள் என ட்விட்டரில் நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
#ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ``பெரியாரை பின்பற்றுபவர்கள் வளர்ந்துவருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப்பெரிய பிசாசு என்கிறார்.
லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சிறந்த மனிதர்களாக இருக்க முடியாது. அம்பேத்கரை பின்பற்றுவதாக கூறும் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நான் அவர்களுக்காக ஒரு சொல்லை உருவாக்கியுள்ளேன், அதுதான் அறிவுசார் பயங்கரவாதம். கருத்தியல் பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டங்களை உருவாக்க வேண்டும்” எனச் சில நாள்களுக்கு முன்பு பேசினார். இதில் பெரியார் மற்றும் அவரின் சித்தாந்தம் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்தக் கருத்துதான் பாபா ராம்தேவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. பாபா ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாபா ராம்தேவ் பேசிய வீடியோவைப் பகிர்ந்துவருகின்றனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர், வித்யா பூஷண் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அம்பேத்கர் மற்றும் பெரியாரை சரியாகப் படித்திருந்தால் பாபா ராம்தேவ் பயனடைவார்.
பாபா ராம்தேவ் சக்திவாய்ந்த மக்களின் கைகளின் உள்ள ஒரு கருவி. இவரைப் பயன்படுத்தும்வரை பயன்படுத்திவிட்டு தனிமையில் விட்டுச்செல்வார்கள். ராம்தேவ் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் சமூக நீதி மற்றும் சுய மரியாதையை நம்பும் மக்கள் அவரது தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக