வெள்ளி, 29 நவம்பர், 2019

இலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தத்தை மீளப்பெற்றது!

கோத்தபய ராஜபக்‌ஷேசீனாஇலங்கை ஹம்பந்தொட்டாவிகடன் :ஹம்பந்தொட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனாவுக்கு குத்தகைக்கு விட்டதை இலங்கை அரசு ரத்துசெய்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பந்தொட்டா, ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்துவருகிறது. 2017-ம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும், ஹம்பந்தொட்டாவில் இருக்கும் துறைமுகத்தை சுமார் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட்டனர்.
ஹம்பந்தொட்டாஹம்பந்தொட்டா துறைமுகத்தை குத்தகைக்கு விட்டால், அதை போர் கப்பல் நிறுத்தும் தளமாக சீனா பயன்படுத்தும். அதனால், இந்தியாவுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆனால், இதை முற்றிலும் மறுத்த சீனா, ஹம்பந்தொட்டா துறைமுகம் இந்தியா -ஐரோப்பாவை இணைக்கும் பாலமாக இருக்கும். இதன்மூலம் வர்த்தகம் மேம்படுத்தப்படும், இலங்கையின் பொருளாதாரம் உயரும் என விளக்கம் அளித்தது.

அதேபோல இலங்கையும், ஹம்பந்தொட்டா துறைமுகம் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமே குத்தகைக்கு விடப்படுகிறது. அங்கு போர் கப்பல்கள் நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிவந்தது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ராஜபக்‌ஷேவின் குடும்பம், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துவந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷே முன்வைத்த தேர்தல் அறிக்கையில் ஹம்பந்தொட்டா துறைமுகப் பிரச்னையும் ஒன்றாக இருந்தது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என அறிவித்திருந்தார்.
தேர்தலில் கோத்தபய வெற்றிபெற்றதும், அவர் தலைமையிலான அரசு, ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தத்தை ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட், நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபற்றிப் பேசியுள்ள இலங்கை அதிபர் கோத்தபய, “சீனா, இலங்கையின் நட்பு நாடாக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த சீனாவின் உதவி தேவைப்பட்டாலும், அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நான் பயப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஓரிரு வருடங்கள் என்றால் பரவாயில்லை, 99 ஆண்டுகள் என்றால் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. எனவே, வேறு விஷயத்தில் சீனா முதலீடு செய்யலாம்” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக