ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூதாட்டியை அறைந்த 21 வயது ரவுடி தீட்சிதர் .. வீடியோ


Devi Somasundaram : ·சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர அருகிலுள்ள முக்குருணி பிள்ளையார் கோவிலில் தனது மகன் ராஜேஷ் வயது 21 என்பவருக்கு பிறந்தநாள் முன்னிட்டு அர்ச்சனை செய்யச் சென்ற சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த காட்டுமன்னார்கோவில் ஆயங்குடி ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரியும் லதா வயது 51 என்பவரை கன்னத்தில் அறைந்து தாக்கிய கோவில் தீட்சிதர் தர்ஷன் வயது 25 என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண் லதா சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்துள்ளார் .
தமிழ் நாட்டு மக்கள் காசுல தமிழக மக்களால் கட்டப்பட்ட கோவில்ல வந்து உள்ள பூந்துகிட்டு நம்ம வீட்டு பெண்கள அடிக்கிறான் ..அதை கேட்டா செயின் அறுக்க வந்தாங்க்ன்னு பொய் பழி போட்டு அவங்களையே அசிங்கப் படுத்துறான்....
அந்தம்மா பிறந்த நாள்ன்னு பூஜை செய்ய வந்து இருக்கு ..அவங்க திருட வந்தாங்களா ...சிவன் கோவில் நகை முழுக்க திருடினது இந்த தீட்ஷிதர் கும்பல் ...

தமிழ் நாட்டை ஆளுவது யார் அரசுன்ற தைரியத்தில இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்....எடப்பாடி அரசு தன்னை எதும் செய்யாதுன்ற திமிர் தான ...இந்துகளை காக்ற மதம் இதானா ? ... அந்தம்மா இந்து இல்லயா .?

Rebel Ravi : · தட்டு ஏந்திப் பிழைக்கும் இவர், பிள்ளை பிறந்த நாளுக்கு அர்ச்சனை செய்ய வந்த அன்னையைக் கன்னத்தில் அறைந்து...கடவுள் உறைவிடத்தில்..மந்திரம் சொல்லும்.வாயில் மயிரு என்று ஒரு பெண்ணைச் சொல்லும் அளவிற்குத் திமிர்... இவர்களின் ஆணவம்..
ஐ ஐ டியிலும் தெரிகிறது.. இங்கும் தெரிகிறது.. சூத்திரர் எதிர்க்காத வரையில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக