திங்கள், 21 அக்டோபர், 2019

வசந்தகுமார் MP மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...

case filed against congress mp vasanthakumarnakkheeran.in - ப.ராம்குமார் : நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கலுங்கடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற நாங்குநேரி காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் இடைத்தேர்தல் நடக்கும் போது விதிகளை மீறி நாங்குநேரி பகுதிக்குள் வந்ததாக காவல்துறையினர் விசாரணைக்காக கூட்டிச்சென்றனர். இதனையயடுத்து, தேர்தல் நடக்கும் போது வாக்கு சேகரித்தது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக