செவ்வாய், 15 அக்டோபர், 2019

புலிகளை பயன்படுத்தி திமுகவை அழிக்க பார்ப்பன தொடர் முயற்சிகள் .. flashback

வளன்பிச்சைவளன் தமிழீழமே தீர்வு என முழக்கம் வைத்தது திமுக! பிழைக்க போனவன் நாடு கேட்கலாமா? என்ற பிரச்சாரத்தை முறியடித்தது திமுக!
 எம்ஜிஆர ஆட்சி காலத்தில் சூளை மேடு படுகொலை எம் ஜி ஆர் அரசுக்கு எதிரானதாக பார்த்த பிரபாகரன், பாலசிங்கம் எம் ஜி ஆரை நேரில் சந்தித்து இக் கொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டனர். 
இவர்களே கலைஞர்  கருணாநிதி ஆட்சி காலத்தில் பத்மநாபாவை படுகொலை செய்து தி.மு.க ஆட்சி க்கு நெருக்கடி ஏற்படுத்தினர். 
அதோடு நில்லாமல் 1991 ல் அதிமுக வுடன் நெருக்கம் காட்டி அவர்கள் மூலம் ராஜீவை சந்திக்க நேரம் கேட்டு காசிஆனந்தன் சந்தித்தார். 
தேர்தலில் திமுக வெல்ல வாய்ப்பு இருந்த சூழலில் தமிழகத்தில் ராஜீவ் படுகொலை நிகழ்த்தினார்கள்! 
ராஜீவை கொன்றது திமுக என காங்கிரஸ், ஜெயலலிதா பிரச்சாரம் செய்தனர். வாழப்பாடி கருணாநிதி தான் கொலை செய்தார் என பித்தலாட்ட பிரச்சாரம் செய்தார். 
அத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அந்த  படுகொலை உதவியது! 
இப்படி  தமிழீழ விடுதலைக்கு உழைத்த திமுக தோற்கடிக்க, அதிமுக வெல்ல உதவியது யார்? 
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நான் இனி ஈழ அரசியல் பேசுவதில்லை என வெளிப்படையாக அறிவித்தார். 
ராஜீவ் கொலையை பயன் படுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுக அலுவலகங்கள், திமுகவினர் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டனர், ஐந்து திமுக வினர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் யார்?
திட்டமிட்டு திமுக வை தடை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி அதையும் மீறி திமுக வளர்ந்தது. தி.மு.க செய்த தியாகம் அளப்பரியது 
அதற்கு கிடைத்த பரிசு வேறு எனினும் திமுக தமிழீழமே தீர்வு என்பதில் உறுதியாக நின்றது. 
தி.மு.க வை தமிழீழம் தீர்வு அதை அந்த காலத்தில் அனைத்து இயக்கங்களை அழித்து சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்ற பிரபாகரன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பல கட்சி ஜனநாயகமே தேவை என ஓங்கி ஒலித்தவர் கலைஞர் கருணாநிதி !
 தமிழீழமே தீர்வு என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் வேறு இயக்கங்கள் அற்ற நிலையில் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது திமுக தனிமனிதர்களை அல்ல.
 வை கோ 1989 ல் ஈழம் சென்றதும் திமுக தலைவர் கருணாநிதி ராஜீவ் கொலை சதியில் ஈடுபட்டாரா என விசாரிக்கப் பட்ட காரணங்களுள் ஓன்று!
ஆனால் நெடுமாறன் 1987 1991 பிப்ரவரி 21 ல் பிரபாகரனை சந்தித்தார் அதை அவரே வெளிப்படையாக அறிவித்த நிலையில் புலிகளின் PRO என தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நெடுமாறனை சிபிஐ, ஜெயின் கமிஷன் விசாரிக்காததன் மர்மம் அவர் பார்பணீயத்திற்கு துணையாக திமுக வை அழிக்க எடுத்துக் கொண்ட முயற்சியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக