செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழக அரசியலை புலிகள் எப்படி பயன்படுத்தினார்கள்...

A Parimalam : ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.
(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?
(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?
(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?
(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?
(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?
(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு
தேர்தலை புறக்கணித்ததால்தானே
ரணில் விக்ரமசிங்கே தோற்றார்
ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?
(7) மாவிலாறு அணையை மூடி போரை தொடங்கியது ஏன்?
(8) புலிகள் தங்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கலைஞரை ஆலோசித்ததில்லை.
கலைஞரின் வேண்டுகோளையோ அவரது ஆலோசனையையோ கேட்டு தங்களது நடவடிக்கைகளை நிறுத்தியதும் இல்லை.
கலைஞர் தமிழர் தலைவர் அவர் போரை நிறுத்திருக்கனும் எனப் புலம்புகிறீர்களே புலிகள் ஏன் கலைஞரிடம் எந்த சூழலிலும் எந்த ஆலோசனையையும் பெறவில்லை?
இந்த கேள்விக்கு பதில் என்ன?

(9) 1991 க்கு பின் புலிகளுக்கும் கலைஞருக்கும் எந்த நேரடி உறவும் அல்லது மறைமுக உறவும் இல்லாத பொழுது கலைஞரால் போரை( தடுக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி) தடுக்க வேண்டிய அவசியம் எப்படி வரும்?
(10) போரில் புலிகளை காப்பாற்ற கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த சமயம் போரை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்ததை உலகறியும். அதன் பின்னர் இலங்கை தன் அறிவிப்பில் இருந்து பின் வாங்கியது.
அதற்கு கலைஞர் எப்படி பொறுப்பாவார்?
இருந்தும் கலைஞரை தூற்றுவது ஏன்?
(11) உச்சக்கட்ட போரின் போது பாராளுமன்ற தேர்தல் நடந்தது. திமுக MP க்களின் பதவிக் காலமே முடியும் தருவாயில் அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம் இல்லையா?
(12) கலைஞரின் அரசு 1991 ல் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய நேரத்தில் அதை கெடுத்தது யார்?
யாருக்காக ஏன் கலைஞர் தனது மாநில அரசை 2009 ல் கலைத்திருக்க வேண்டும்?. அதனால் யாருக்கு என்ன நன்மை?
(13) கலைஞருக்கும் புலிகளுக்கும் உறவு என்ற ஒன்றே இல்லாதபோது அங்கே துரோகம் வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே.
பரஸ்பர நம்பிக்கையே இல்லாத போது துரோகம் எங்கிருந்து வரும்?
(14) எந்த ஒரு போரின் தோல்வியும் ஒரு சில நாட்களில் நிர்ணயிக்கப்படுவதில்லை.
ஈழப்போர் 1983 ல் தொடங்கி 2009 ல் முடிந்துள்ளது. 26 வருடங்களில் நடந்த போருக்கும் புலிகளின் வெற்றி தோல்விகளுக்கும் கலைஞருக்கும் எந்த தொடர்பாவது எப்போதாவது இருந்ததுண்டா?
2009 போரில் மட்டும் கலைஞரை சம்பந்தப்படுத்துவதும் அவர் மேல் சேற்றை வாரி இறைப்பதும் ஏன்?
கலைஞர் புலிகளுக்கு எதிராக என்றுமே பேசியதில்லை
அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஈன எச்சப் பொறுக்கிகள் வேண்டுமென்றே கலைஞரை அவதூறு செய்கிறார்கள்
நாசமா போவீங்கடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக