சனி, 12 அக்டோபர், 2019

இந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகிறார்கள்?

A Sivakumar : தமிழ்நாடு தமிழருக்கே சொந்தம்.
இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் என்று ஆகிவிட்டபடியால்
திறந்த வீட்டிற்குள் நாய் நுழைவது போல யார் வேண்டுமானாலும் நுழையவும் முடியாது,
நுழைந்துவிட்டு மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது
அமெரிக்காவிற்கே அதிபராக இருந்தாலும் எங்கள் மனதிற்கு பிடித்தால் மட்டுமே மதிப்போம்
இல்லையேல் மிதிக்கவே செய்வோம்.

முழுக்க முழுக்க மாநில கட்சிகளின் ஆதிக்கத்திலிருக்கும் ஒரு மாநிலத்தில், இன்றளவும் ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், வி.பி.சிங்கும், மன்மோகன் சிங்கும் எப்படி மதிக்கப்படுகிறார்கள்?
ஏன் அவர்கள் மீதெல்லாம் அரசியல் அக்கப்போர்களை தாண்டி எங்களுக்கு வெறுப்புணர்ச்சி எழவில்லை?
இன்றளவும் வாஜ்பாய் அவர்களை யாரும் இங்கு வெறுக்கவில்லையே, மதிக்க தவறுவதில்லையே ஏன்?
இதற்கெல்லாம் விடைகளை கண்டுபிடித்தால் மட்டுமே, இங்கு ஆல் போல பரந்து, விரிந்து, கிளை பரப்பியிருக்கும் மோடி மீதான எதிர்ப்பையும், வெறுப்பையும் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியா, இந்து மதம், சனாதனம், இறையாண்மை, அரசியல் நாகரீகம் என்று எங்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு மேலே இருக்கும் கேள்விகளுக்கு நீங்க விடை தேடி படிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக