புதன், 9 அக்டோபர், 2019

யாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய அந்த காலத்து உலகமகா கில்லாடியின் கதை

எமில் சவுந்தரநாயகம் பற்றிய பெருமை மிகு வீராவேச கதைகளை பலரும்
கூறுவதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன் .
அவை எல்லாம் ஒரு கிராமத்து பேச்சு வழக்கு போல இருந்தது .
யாரவது ஒரு புத்திசாலியை அவன் ஒரு எமில் அவன் ஒரு எமில் சவுந்தரநாயகம் என்ற ஒரு புகழ் வசனமாக இருந்தது. ஆனால் யாரும் அதை பற்றி முழுமையாகவோ விரிவாகவோ கூறுவதில்லை. பலருக்கும் அதுபற்றி முழு விபரமும் தெரிந்திருக்கவில்லை.
எந்த ஊடகமும் தமிழில் எழுதவே இல்லை. ஒரு ஈழத்தமிழிழர் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறாரே?
ஏன் ஒருவருக்கும் அதுபற்றி சரியாக தெரியவில்லை?  எவ்வளவு முக்கியமான ஒரு வரலாறு பற்றி ஏன் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஒன்றுமே எழுதவில்லை என்று சிந்தித்தேன். .
இது தமிழ் ஊடகங்களுக்கே உள்ள ஒரு பொறுப்பற்ற தன்மைதான் .
வெறும் வெற்று கோஷங்களும் நுனிப்புல் மேய்ச்சலுமே தமிழ் ஊடகங்களின் ..குறிப்பாக இலங்கை தமிழ் ஊடகங்களின் வரலாறாக இருக்கிறது .
அதன் வெளிப்பாடுதான் ஈழத்தமிழர்களின் அரசியல் கருத்துக்கள் பலவும் ஒரு நுனிப்புல் மேய்ச்சல் விவகாரமாகவே இருக்கிறது .
எந்த கிரிமினலையும் அவனது கிரிமினல்தனத்தை ஒரு கதாநாயக பாவத்தோடு கொண்டாடும் மனோபாவம் வளர்ந்தது .
எமில் ஒரு மோசமான குற்றவாளி . ஆனால் சிறுவயது முதலே அவரை ஒரு பெரிய கதாநாயகன் போன்றுதான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.
எமில் சவுந்தரநாயகம் கொஞ்சம் பிந்தி பிறந்திருந்தால் அவனும் ஒரு ஈழவிடுதலை போராட்ட தலைவனாகி இருப்பான் .  மக்களும் போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே என்று கொண்டாடி இருப்பார்கள்.
ஏனெனில் ஈழப்போராட்ட வரலாறுகளில் காணப்படும் சாகச தில்லுமுல்லுகளை விட பல மடங்கு அதிக தில்லாலங்கடி எல்லாம் அறுபதுக்கு முன்பே எமில் சவுந்தரநாயகம் என்ற ஈழத்தமிழர் அரங்கேற்றி உள்ளார் .

கெட்டவன் என்றாலும் அவன் கெட்டிக்காரன் என்ற அடிமை மனோபாவம்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு காரணம் என்று கருதுறேன்.
ஏனெனில் எமில் சவுந்தரநாயகம் ஈழத்தமிழ் மக்களால் அந்த காலத்தில் மறைமுகமாக ஒரு காதாநாயகன் போன்றே கருத்தப்பட்டார் .
அந்த மனோபாவத்தில் இருக்கிறது அத்தனை கோளாறுகளும். Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam, usually known as Emil Savundra (6 July 1923 – 21 December 1976)



flashback  : http://namathu.blogspot.com/2018/01/blog-post_276.html

எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு


திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர்  ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் ( Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்  பிறந்ததாக தெரிகிறது .. இவரின்  மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம்  வாழ்க்கை முழுவதுமே  தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது  24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.
அக்காலகட்டத்தில் கொரியா யுத்தம் நடந்தது , சீனாவின் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை அமுலில் இருந்தது, சீன பொருளாதரத்தை சீரழிக்கும் அமெரிக்க முயற்சியில் எமில் சவுந்தர நாயகத்தின் டம்மி கம்பனி ஈடுபட்டது. சீனாவுக்கு பெற்றோலிய எண்ணைய் ஏற்றுமதி செய்யும் போலி கம்பனி ஒன்றை தனது அமெரிக்க தொடர்புகள் மூலம் உருவாக்கினார் .சீனாவை ஏமாற்றி பெரும் தொகையான பணத்தை பெற்றுக்கொண்டார். இல்லாத ஆயிலுக்கு பணம் அனுப்பி  ஏமாந்தது சீனா. இந்த விதமான நடவடிக்கைகள் ஒரு தடவையோடு மட்டும் நிற்கவில்லை என்பதுதான் இதில் வேடிக்கை.
இதன் பின் 1954   இல் அரிசி ஏற்றுமதி மோசடியில் அகப்பட்டு பெல்ஜியத்தில் சிறை தண்டனை பெற்றார் . இல்லாத அரிசியை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் இருந்து இலகுவாக வெளியே வந்தார்,
இவர் எப்பொழுதும் பல சக்தி வாய்ந்த  பிரமுகர்களை தனது லஞ்சத்தால் கையில் வைத்திருந்தார், இவரது உள்வட்டதில் ஐரோப்பிய அரசியல் பொருளாதார பிரமுகர்கள் மட்டுமல்லாமல் வத்திகான் வரை அங்கத்தினர் இருந்தனர்.

 1958 இல் மீண்டும் இவர் தலைதூக்கினர், இந்த  தடவை இவர் ஆபிரிக்க நாடான கானாவின் குடியரசு தலைவரின் நண்பரானார் . ஏராளமான ஊழலில் திளைத்திருந்த  அன்றய கானாவின் முழு கனிம வளங்களையும் ஒரு போலி கம்பனியின் பெயரில் மொத்தமாக எழுதி வாங்கினர். அதில் ஒரு பகுதி வெற்றியை  பெற்று அங்கிருந்து திருப்பி அனுப்பட்டார், அவர் அங்கு இருப்பது அந்நாட்டு தலைவர்களுக்கு மிகபெரும் அரசியல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்ற ஒரே காரணத்தால் அவர் அதில் தப்பினார்.

இவரது அடுத்த மோசடி கோஸ்டா  ரீகாவில்அரங்கேறியது.
1959 இல் கோஸ்டா ரிக்காவில் ஏராளமான கோப்பி கொட்டைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசாங்கம் திணறி கொண்டிருந்தது .கோஸ்டா ரிக்காவின் பொருளாதார சிக்கலில் சவுந்தரவின் திருட்டு புத்திக்கு வேலை இருந்தது, அந்த நாட்டுக்கு பொய்யான வாக்குறுதிகள் போலியான கம்பனி மூலம் முதல் தொகையை கொடுத்து சிறு அளவிலான கோப்பியை வாங்கினார்.
சவுந்தர நாயகத்தின் கம்பனியை நம்பிய கோஸ்டா ரீக்கா பெருமளவு கொப்பியை  கப்பலில் அனுப்பியது, கதை அவ்வளவுதான் , கோஸ்டா ரிக்காவின் பொருளாதாரமே ஆட்டம்  கண்டது.  ஆனாலும் அதில் இருந்து எமில் தப்பி விட்டார்/
இவர் 10 February 1960 இல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தார்
இவர் ஒரு டாக்டர் ஒரு எஞ்சினியர் என்றெல்லாம் அறியப்பட்டவர். ஆனால் அவை எல்லாம் உலகை ஏமாற்ற இவர் புனைந்த கதை என்பது தெரியவருகிறது, விமான ஓட்டிக்கான லைசென்ஸ் வைத்திருந்தார் .
1962  இல் பிரித்தானியாவில் இவர் தொடங்கிய  Fire, Auto and Marine Insurance Company என்ற  இன்சுரன்ஸ் கம்பனி மூலம்  மக்களை ஏமாற்றி போலி பாலிசிகளை விற்று  (400,000) நான்குஇலட்சம்  வாடிக்கையாளர்களை தெருவில் நிறுத்தினார்.
வழமையான இன்சுரன்ஸ் கம்பனிகளை போலல்லாது அப்பொழுதுதான் அறிமுகமாகி இருந்த கம்பியுட்டர் தொழில்நுட்பம் இவருக்கு ஒரு மோசடி வழியை காட்டியது. வாடிக்கையாளர்கள் வழமையான இன்சுரன்ஸ் கம்பனிகளிடம் நஷ்ட ஈடு பெற்று கொள்வதில் உள்ள தடைகள் கம்பியுட்டர் மூலம் இயக்கப்படும் தனது கம்பனியின் நிர்வாகத்தில் இருக்காது என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தினார் . மிகவும் பிரபலமாக இருந்த கம்பனிகளை பின்னுக்கு தள்ளி இவரது FAM கம்பனி கொடிகட்டி பறந்தது ,
சட்டத்தில் உள்ள ஓட்டைகள் இவருக்கு கைகொடுத்தது ,

இவரது சொத்துக்களின் அன்றைய மதிப்பு  540,000 பவுன்களும்  £870,000 பவுன்கள் பெறுமதியான இவரது கம்பனியின் சொத்துக்களும் இருந்தது,  
இவர் மிகவும் படாடோபமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள். விலை உயர்ந்த  படகு. படகோட்ட போட்டிகளில் மிகுந்த ஆசை கொண்டிருந்த எமில் ஒரு படகு ரேசில் விபத்து ஏற்பட்டு முதுகு முள்ளந்தண்டில் நோய்வாய்ப்பட்டார்.
 மிகவும் பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடு , அந்த காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அழகியான கிறிஸ்டீன் கீலர் போன்ற பெண்களின் சகவாசம் உயர்ந்த இடத்தில இருந்த அரசியல்வாதிகள் போன்ற பிரமுகர்களின் பார்ட்டி போன்றவற்றில் தாராளமாக செலவு செய்தார்,
இறுதியில் இவருக்கு எட்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது .. ஆனாலும் இவருக்கு ஏற்பட்டிருந்த நோயின் காரணமாக இவர் வைத்திய சாலையில் தனது இறுதி காலத்தை கழித்தார் 
 இவர்  21 December 1976 at age 53.வயதில் காலமானார் . ஒரு நேர்மையான மனிதராக  வாழ்ந்திருந்தால் இவர் எவ்வளவோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார்,  அவரிடம் குடிகொண்டிருந்த  மோசடி குணாதிசயங்கள் எவ்வளவு திறமை இருந்தும் கல்வி இருந்தும்  இறுதியில்  பலரின்  வயித்தெரிச்சலை வாரி கொட்டி கொண்டு மறைந்து போனார்  
இவரது வாழ்க்கை வரலாறு இன்னும் முழுவதுமாக எழுதப்படவில்லை

en.wikipedia.org/wiki/Emil_Savundra

Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam, usually known as Emil Savundra (6 July 1923 – 21 December 1976),[1] was a Sri Lankan swindler. The collapse of his Fire, Auto and Marine Insurance Company left about 400,000 motorists in the United Kingdom without coverage.
As a post-war black marketeer, Savundra committed bribery and fraud on an international scale before settling in the UK to sell low-cost insurance in the fast-growing automotive market. By defaulting on mandatory securities, he funded a lavish lifestyle and travelled in fashionable circles. This attracted the attention of the press, who uncovered evidence of major fraud. In a TV interview with David Frost, Savundra demonstrated contempt for his defrauded customers (some of whom were in the studio audience) and denied any moral responsibility. The police had been investigating him, and he was soon arrested and sentenced to eight years' imprisonment. Released after six, Savundra died two years later as a drug addict.

Contents

Early life and career

Born into a Tamil family of lawyers in Ceylon during the British Raj, Savundra grew up with a mixture of respect for and resentment of Britain. Although he served a brief commission in the Ceylon Engineers, he was refused entry into the Royal Air Force during the Second World War despite holding a pilot's licence. Savundra married a young Tamil woman, who remained loyal to him over a turbulent thirty-year career.
When Ceylon became independent in 1948, Savundra (age 24) tried to develop a business career on the island. Around this time he developed insulin-dependent diabetes, which would shorten his life. During this period, in the context of the Korean War, Savundra was used as a local intermediary in the economic sabotage of a shipload of oil which he appeared to be selling to China but which his American contacts had ensured did not exist. After using this device to support the US war effort, he repeated the process.
In 1954, at age 31, Savundra was convicted of swindling the Kredietbank of Antwerp over a non-existent cargo of rice and was imprisoned in Belgium. In 1958 he resurfaced as a representative of American company Camp Bird for mineral interests in Ghana. Savundra was involved in bribery at the highest level of government, claiming in his diaries that this was typical Ghanaian business practice during the 1950s. He was deported from the country, presumably because a trial would have caused local embarrassment.[citation needed] Savundra, who had developed a career of sharp practice characteristic of a post-war black marketeer, perpetrated a coffee-bean fraud at the expense of the Costa Rican government in 1959.
His only criminal offence in Ceylon was the failure to pay an Inland Revenue bill based on earnings from some of his economic frauds. Savundra was absent from the island between 1951 and 1965, when he returned at age 42.

Fire, Auto and Marine

By the early 1960s Savundra had settled in the United Kingdom, where he perpetrated the fraud for which he would be convicted in 1968. In 1963 he formed the Fire, Auto and Marine Insurance Company (FAM), which took advantage of the thriving motor-insurance industry when car ownership in the UK was increasing and road networks were being developed. FAM offered low insurance rates, with crude, but revolutionary at the time, computerisation in a collaboration with IBM.
Savundra had a lavish, high-profile lifestyle before FAM collapsed due to cash-flow problems and exposure by Sunday Times reporters of the company's lack of proper securities. His activities had included powerboat racing in the Daily Express Cowes-to-Torquay race, where many photographs exist of Savundra mingling with rich and powerful figures. In his first race he fractured his spine, and was referred by a high-society friend to osteopath Stephen Ward. Savundra became involved with Christine Keeler and Mandy Rice-Davies, and was referred to at Ward's trial as "the Indian doctor" (although he was neither Indian nor a doctor).[citation needed]
Because the scandal centred around the Minister of War, female escorts, the Russian defence attache, a well-known actress, a senior member of the House of Lords and many society figures, Savundra did not receive much attention. However, Keeler and Rice-Davies published autobiographies mentioning Savundra; this may have been when Private Eye began noticing Savundra's activities in London, triggering his downfall.[citation needed] David Frost, Savundra's eventual nemesis, posed for a photograph in the Christine Keeler shoot for the BBC's That Was The Week That Was by Lewis Morley.[2][not in citation given]
Savundra was one of the first controversial businessmen to use UK libel law in an attempt to prevent publications such as Private Eye from publishing allegations about his life and business practices. At his 1968 trial, witnesses testified that he presented documents indicating that he underwrote FAM with securities worth £540,000 and £870,000 in blue-chip shares; no such securities existed when the company failed. When it began to falter, FAM continued to issue coverage documents; only part of the premiums were submitted by the company's brokers (some of whom also engaged in fraud). FAM, the first of six insurance companies to fail during the 1960s and early 1970s, was noted because of Savundra. Although Vehicle and General was the largest of the companies to fail, the belief grew that FAM was deliberately failing to meet its obligations to customers.
A Sunday Times team investigating Savundra's affairs reported that his "reserves" in stock worth nearly a million pounds were forgeries. According to his defenders (who overlooked his track record in fraudulent trading), he insured high-risk clients and did not realise that he should allocate more resources to cover claims. Although Savundra reportedly transferred FAM assets to a bank in Liechtenstein, no such funds were found.
In May 1966, after a heart attack, the 42-year-old Savundra sold his FAM shares to his FAM directors. Led by Stuart de Quincey Walker, the company quickly collapsed and left an estimated 400,000 motorists uninsured. Savundra was pursued by the media, who besieged his mansion in Hampstead for days.
He fled to his native Ceylon, where he was sheltered by relatives, and the Ceylonese government refused to confirm that they would deny a British request for extradition. In December, Savundra returned to Europe; he was in Rome for a month, still pursued by the British press. In January 1967, he re-entered the United Kingdom; at age 44, he was dependent on pethidine for back pain.

Frost Programme controversy

Screenshot of a bespectacled Savundra, with David Frost's back to the camera
Savundra on The Frost Programme
The fraudulent nature of Savundra's business affairs were again made public in 1967 as the result of a television interview by David Frost on the Rediffusion London show, The Frost Programme.[3] The previous week, Frost had announced that he would include the story of the FAM debacle and Savundra in his next programme. Savundra injected himself with pethidine before the interview, appearing oddly calm despite Frost's aggressive questioning. Frost encouraged the studio audience to heckle Savundra. For his part, Savundra called Frost the "finest swordsman in England" and also referred to the audience (which included his clients, victims of the insurance-company failure) as "peasants" and claimed "no moral responsibility" for what had happened.
Frost (who had anticipated that Savundra would express remorse to his victims) confronted him about his conduct, and the programme ended with shouts from the audience of "Well done, Frostie!" The interview was quickly dubbed "trial by television", and caused concern by Rediffusion management that Savundra's right to a fair trial had been compromised. The programme enhanced Frost's reputation in the UK as a vigorous interviewer.

Imprisonment and death

Savundra was arrested shortly after his appearance on The Frost Programme after a two-year police investigation. In March 1968, he was sentenced to eight years' imprisonment with a £50,000 fine or an additional two years' imprisonment. Savundra was eventually placed in the prison hospital, where he became addicted to drugs to control persistent pain. Whilst he was in prison, it was discovered that he had used his wealth to go to clinics around the world; the clinic records were collected and collated. Savundra was released from prison shortly before Christmas in 1974, still addicted to drugs. He died in Old Windsor, near Windsor, Berkshire, on 21 December 1976 at age 53. Survived by his widow, Savundra was registered as a "retired banker" and identified as Roman Cath

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக