வெள்ளி, 4 அக்டோபர், 2019

தமிழி வட்டெழுத்து மாற்றிமென்பொருள் .. உங்கள் பெயரை தமிழியில் எழுதலாம் வாருங்கள்

https://tamiljinavani.appspot.com
தமிழ் கோ விக்ரம்·:
கிடைத்தற்கரிய பெரும்பேறு பெற்றநாள் இன்று. மகிழ்ச்சியை எவ்வாறு
வெளிப்படுத்துவதென தெரியாத அளவிற்கு மீமகிழ்ச்சியாய் இருக்கிறேன். தமிழி மற்றும் வட்டெழுத்துகளில் எழுத நான்கைந்து ஆண்டுகளாக செயலிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. தமிழியில் அனைத்து எழுத்துகளும் அடங்கிய ஒரு எணினி வடிவக்கோப்பு கிடைத்தது. அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் படமாகமாற்றி வெட்டி ஒட்டி சேர்த்து எழுதிப்பதிவிட்டுவந்தேன்.
நான்காண்டுகளுக்கு முன்பு www.thevaaram.org என்னும் வலைத்தளத்தில் தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துரு{Font} கிடைத்தது. அவற்றை கணினியில் நிறுவிப்பார்த்தேன். அதில் தற்போதைய தமிழில் தட்டச்சு செய்தால் இவ்விரு எழுத்துகளாக மாறுமாவென்று பார்த்தேன். வட்டெழுத்துகளில் மட்டும் மாறியது. தமிழியில் மாறவில்லை. மிகவும் வருந்தி கவல்புகொண்டேன். கடந்த ஒருமாதமாக மிகவும் முயன்று தமிழி மாற்றியை தேடிவந்தேன். இந்த நேரத்தில், இன்று நண்பர் தமிழ வேள் அவர்கள் இவ்வெழுத்துமாற்றி மென்பொருள் தளத்தை பதிவிட்டிருந்தார். கண்டதும் அளவிடற்கரிய பெருமகிழ்வுற்றேன். அதைப்பதிவிட்ட நண்பருக்கு கோடி நன்றிகூறி வணங்குகிறேன்.

இந்த மென்பொருளை உருவாக்கியவர்களுக்கு எத்தனை ஆயிரங்கோடி நன்றி சொன்னாலும் தகும்.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என இப்பழந்தமிழ் எழுத்துகளில் எழுதவும் அறிந்துகொள்ளவும்
விருப்பங்கொண்ட நண்பர்கள், இவ்விணைப்பை https://tamiljinavani.appspot.com#editor சொடுக்கி, தற்காலத்தமிழில் எழுதினால் தமிழி மற்றும் வட்டெழுத்தில் மாற்றிக்காட்டும். அவற்றைப் படமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம். விருப்பமுடைய அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
தமிழி, வட்டெழுத்து கற்போம்.
_தமிழி_மீண்டெழுக
_வட்டெழுத்து_திரும்புக
_செந்தமிழ்_சிறப்புறவாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக