வெள்ளி, 4 அக்டோபர், 2019

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை ... உச்சா நீதிமன்றம் உத்தரவு

samayam.com :  ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட
இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை.
அவை செல்லாது கூறி புறக்கணிக்கப்பட்டு விட்டது. மேலும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையின் போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
; இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


மேலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் இன்பதுரையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இன்று காலை 11.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை - லைவ் அப்டேட்ஸ்...!

நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நூலக கட்டடத்தின் கூட்ட அரங்கில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் மேற்பார்வையில் 26 பேர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க, வரும் 23ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணை அன்றைய தினம் மீண்டும் நடைபெற உள்ளது. இதனால் இருதரப்பிற்கும் எந்தவித பிரச்சினையும் இன்றி, வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறுகிறது.

இதோ இறுதி வேட்பாளர் பட்டியல்- இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக