வியாழன், 10 அக்டோபர், 2019

லலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் !

THIRUCHIRAPALLI, LALITHAA, JEWELLERY, ROBBERY, திருச்சி, லலிதா, ஜூவல்லரி, கொள்ளைdinamalar.com : திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், கடந்த அக்., 02ல் மர்ம நபர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் முகமூடி அணிந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது, இரு நபர்கள் எடுத்து வந்த அட்டை பெட்டியில் லலிதா நகைக்கடையின் சில நகைகள் இருந்ததை கண்டறிந்தனர்.

அதில் ஒருவர், போலீசுக்கு பயந்து தப்பி ஓடினார். பிடிபட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் என தெரிந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், தப்பியோடிய சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (அக்., 10) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் சுரேஷ் சரணடைந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக