ஞாயிறு, 13 அக்டோபர், 2019

நடிகை சுருதி ஹாசன் : போதைக்கு அடிமையாக இருந்தேன் .. சிகிச்சை எடுத்து கொள்கிறேன்

மாலைமலர் : நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு
அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் சினிமாவில் ஒதுங்கி இருந்தது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன், ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக