சனி, 19 அக்டோபர், 2019

ராஜேந்திர பாலாஜி : காஷ்மீரை போல முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்

ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ ஆர்பாட்டம் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'-ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக  கடுகடுக்கும் எஸ்டிபிஐ!
vikatan - செ.சல்மான் பாரிஸ் - ஈ.ஜெ.நந்தகுமார் ; `'எங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அ.தி.மு.கவுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?' ``காஷ்மீரைப் போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதைக் கண்டித்துப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை தெற்குவாசல் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பேசியவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின் மதுரை மாவட்டத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்கள் பற்றி மிக மோசமாகவும் மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் முஸ்லிம்கள் தரப்பில் கோரிக்கை மனுக்களை அளிக்க அழைத்துச் சென்றுள்ளார் அப்போது முஸ்லிம் ஜமாத்தினரிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, `எங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அ.தி.மு.க வுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?' என்று பேசியுள்ளார். மனுவை வாங்க மறுத்ததோடு, `எங்களுக்கு வாக்களிக்காமல் இப்படி நடந்துகொண்டீர்கள் என்றால், காஷ்மீரில் நடந்தது போல தமிழக முஸ்லிம்கள் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம் போய் மனுவைக் கொடுங்கள்' என்று பேசி, முஸ்லிம்களை அவமதித்துள்ளார்.
அமைச்சர் என்ற முறையில் அவரிடம் மனு அளிக்க, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பி.ஜே.பியின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முஸ்லிம்களிடம் மனுவை வாங்க மறுத்ததோடு மிரட்டும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது. அவர் உறுதியேற்ற அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்தப் பேச்சுக்கு முஸ்லிம்களிடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.


















ஆர்பாட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்வது வாக்காளரின் உரிமை. தங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அ.தி.மு.க அரசு எதுவும் செய்யாது என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசும், அ.தி.மு.க தலைமையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக