சனி, 26 அக்டோபர், 2019

குர்திஷ் தேசம் – மலைகளைத் தவிர நண்பர்கள் யாரும் இல்லை

kurdistan2kurdish2  மீராபாரதி:  குர்திஸ் மக்களின் வரலாறும் இப்பொழுது அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதும் தொடர்பான சிறிய மேலோட்டமான பார்வை இது. ஒரு பாடகரின் குறிப்பை மொழிபெயர்த்துள்ளேன்.
imagesகுர்திஸ் மக்கள் இப்பொழுது வாழ்க்கின்ற நிலத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர்.  இது இவர்களின் தாய் நிலம்.  முதலாம் உலகப் போரின் பின்பும் ஓட்டமான் சம்ராஜியத்தின் விழ்ச்சியின் பின்பும்  பிரிட்டிஸ் பிரான்ஸ் ஆட்சியாளர்கள் இந்த நிலத்தில் குர்திஸ்தான் (Kurdistan) என்ற நாட்டை உருவாக்கலாம் எனவும் அதில் அவர்கள் அமைதியாக வாழலாம் என உறுதியளித்தனர். ஆனால் வழமையைப் போல இந்த நிலத்தைப் புதிதாக உருவாகிய இராக், இரான், துருக்கி, மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு துண்டு துண்டாகப் பிரித்துக் கொடுத்து அவர்கள் தமது உறுதிமொழியை மீறி இந்த மக்களுக்கு துரோகமிழைத்தனர். அன்றிலிருந்து இந்த நான்கு நாடுகளும் குர்திஸ் மக்களை இனவழிப்பு செய்தும் ஒடுக்கியும் வருகின்றனர். முக்கியமாக துருக்கி அன்றிலிருந்து இன்றுவரை மிக மோசமான இனவழிப்பு நடவடிக்கைகளை இவர்களுக்கு எதிராக மேற்கொண்டது. குறிப்பாக குர்திஸ் மொழியை குர்திஸ் பெயர்களை போல பல விடயங்களைத் தடைசெய்தது.  மேலும் குர்திஸ் மக்களை குர்திஸ் (Kurds) என அழைக்க மறுத்து “மலைகளில் வாழும் துருக்கியர்” (Mountain Turks” ) எனக் கூறி இவர்களைப் படிப்பறிவில்லாத காட்டுமிராண்டிகள் என இழிவு செய்தனர். இருப்பினும் குர்திஸ் மக்கள் 80களிலும் 90களிலும் துருக்கிய அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி பல ஆயிரம் மக்களையும் போராளிகளையும் இழந்தனர். ஆனாலும் இன்றுவரை எந்த முன்னேறமும் இல்லை.
0_7TizuR4OONbIRuLHமத்திய வளைகுடா போரின் போது சதாம் குசையுனுக்கு எதிராகப் போராடும்படி இவர்களை அமெரிக்கா தூண்டியது.  அவர்கள் அவ்வாறு போராடியபோதும் இறுதியில் குர்திஸ் மக்களைப் பாதுக்காக்க அமெரிக்கா தவறியது. இதனால் சதாக் குசைன் இந்த மக்களை இராசயண ஆயுதங்களினால் பல்லாயிரம் குர்திஸ் மக்களை கொலை செய்தார். 2003ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் மேற்கு நாடுகளின் அணிகள் இராக்கை ஆக்கிரமித்தபோது  குர்திஸ் மக்களும் இவர்களுடன் இணைந்து சாதாமின் இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டார்கள். இதன் மூலம் இராக்கிலுள்ள தம் பிரதேசத்தில் தமக்கான சுயாதின ஆட்சியை உருவாக்கினார்கள். ஆனால் மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இராக்கிலுள்ள குர்திஸ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தபோது மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இவர்கள் அவர்களை விரட்டியடித்தார்கள்.
_109163445_land_usev2_640-ncஇதேபோல ஐஎஸ்ஐஎஸ்  சிரியாவிலுள்ள இவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து பல்லாயிரம் மக்களை கொலை செய்தபோது சிரியாவின் அதிபர் அசாத் தனது இராணுவத்தை அங்கிருந்து வெளியேறும்படி பணித்தார். இதனால் பல்லாயிரம் குர்திஸ் மக்கள் மேலும் மரணித்தனர். ஆனாலும் மேற்கு நாடுகளின்  விமானத்தாக்குதல் உதவியுடனும் ஆயுதங்களின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை இந்த நிலத்தில்திலிருந்து விரட்டியடித்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் இன்னுமொரு சுயாதின ஆட்சியுள்ள தேசம். இதுவே ரோஜவா (Rojava) ஆகும்.
Report this ad
_109139586_syria_control_07_10_camps_map-ncரோஜவா (Rojava) சுயாதின ஆட்சியானது ஜனநாயக இணைசுயாட்சி (Democratic Confederalism) என்ற கோட்பாட்டிற்கு அமைய உருவானது. இதன் எளிமையான விளக்கம் என்னவெனில் கீழ் மட்டத்திலிருந்து சுயாதின ஜனநாயக ஆட்சியை உருவாக்குவது எனலாம். இதற்கு அடிப்படையாக தொழிலாளர்களின் உரிமை, சமத்துவம், பெண்ணியம், சூழலியில் போன்ற கோட்பாடுகள் இருக்கின்றன. இந்த ஜனநாயகமானது மேற்குலகில் பின்பற்றப்படும் ஜனநாயகத்தைவிட மிகவும் மேம்பட்டதாகும்.
_109157259_iraq_syria_control_safe_zone_640-ncகுர்திஸ் மக்கள் சிரியாவில் அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டு மரணிக்க விரும்பவில்லை. ஆனால் சிரியாவின் அதிபர் அசாத் இவர்களை கைவிட்டபோது இவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் சர்வதேச சுரண்டலுக்கு அடிபணியாமல் தமது உண்மையான ஜனநாயக வழியில் வாழ விரும்பியபோது அமெரிக்கா வழமையைப் போல அதனை விரும்பவில்லை.   இப்பொழுது அமெரிக்காவும் குர்திஸ் மக்களை கைவிட்டுவிட்டு செல்ல இவர்கள் துருக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக மரணத்தை எதிர்நோக்கி வாழ்விற்காகப் போராடுகின்றர்.
images (1)அமெரிக்கா மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை கொண்டுவர விரும்புவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த ஜனநாயகமானது குர்திஸ் மக்கள் பின்பற்றுகின்ற விரும்புகின்ற ஜனநாயகமில்லை. தாம் மரணிக்காமல் அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டமையினால் அசாத்தின் சிரியாவும் புட்டினின் இரசியாவும் இவர்களைப் பாதுகாக்க மறுக்கின்றனர்.
Kurdish-inhabited_area_by_CIA_(2002)ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு மிகப் பெரும் பலமாகவும் நிதியுதவியும் செய்த துருகிக்கிய அரசானது குர்திஸ் மக்களை பயங்கரமாக பெரியளவில் ஒடுக்கும் அரசுகளில் ஒன்று. இந்த அரசானது இன்று சிரியாவிலுள்ள குர்திஸ் மக்களின் நிலங்களை ஆக்கிரக்கும் போரை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் குர்திஸ் மக்கள் மீதான இனவழிப்பையும் படுகொலைகளையும் மேற்கொள்கின்றது. மேலும் குர்திஸ் போராளிகளிடம் கைதிகளாக இருக்கின்ற ஐஎஸ்ஐஎஸ்யின் தீவிரவாதிகளை விடுவிக்கவும் முயற்சிக்கின்றது. முரண்நகை என்னவெனில் இந்த நிலத்தில் தான் நேட்டோவின் (NATO) மிகப் பெரிய இராணுவ அணி இருக்கின்றது.
e01f26a8631d7b14386826263e0dba6fe34ebc26உலகின் பெரிய அதிகார சக்திகள் தமக்குத் தேவையானபோது தமது நோக்கங்களுக்கு ஒத்துப்போகின்றபோது குர்திஸ் மக்களைப் பயன்படுத்துகின்றனர். தேவையில்லாதபோது ஓநாய்களிடம் விட்டுவிட்டு சென்று விடுகின்றார்கள். இதுதான் இவர்களின் ஜனநாயகம்.  இதனால் குர்திஸ் மக்கள் இந்தப் போரில் வெல்ல முடியுமா என்பது கேள்வி.
images (2)குர்திஸ் மக்களுக்காக
அமெரிக்க அரசு குரல் கொடுக்காது.
சிரிய அரசு குரல் கொடுக்காது.
இரானும் குரல் கொடுக்காது.
இரசியாவும் குரல் கொடுக்காது.
ஆகவேதான் இதை வாசிக்கின்ற இதயமுள்ள ஒவ்வொரு மனிதரும் குர்திஸ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
குர்திஸ் மக்கள் கூருவார்கள். “ மலைகளைத் தவிர எங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லை”
There’s an old Kurdish saying that goes:
“NO FRIENDS BUT THE MOUNTAINS”
குர்திஸ் மக்களுடன் தோழமையுடன் ஒன்றுபட்டு நிற்போம்.
#RiseUp4Rojava
இதை எழுதியவர் Written by Lee Brickleyhttps://www.facebook.com/LeeBrickleyMusic/photos/a.1710443455654878/2787282204637659/?type=3&theater&hc_location=ufi
மொழிபெயர்ப்பு – மீராபாரதி
Where is “Kurdistan”?
https://www.bbc.com/news/world-middle-east-29702440
படங்கள் கூகுள் நன்றி


Advertisements
Report this ad
Report this ad

Leave a Reply

Categories

பதிக்கப்பட்டவை…

தேடியலைந்தவர்கள்....

  • 54,749 மனிதர்கள்

தேடுகின்றவர்கள்…

free counters

எனது முகம்

http://www.facebook.com/praknjai
October 2019
M T W T F S S
« Jun
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 1,622 other followers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக