சனி, 5 அக்டோபர், 2019

தமிழச்சி : கீழடி ஆய்வை தமிழர்களுடன் மட்டும் சுருக்கி விடாதீர்கள் ... அதைத்தான் ஆரியம் .

"ஒடிசாவில் கோராபுட் மாவட்டத்தில் குவி என்ற திராவிட மொழி பேசும் அந்த
கிராமத்தின் பெயர் தமிலி (Tamili) அங்கு சிறப்பு ழகரம் இல்லாததால் தமிளி என்றே ஒலிக்கப்படுகிறது. தமிளிக் குடி என்ற ஓர் ஊரும் உண்டு" என்கிறார் ஆய்வாளர் Balakrishnan R. கூகுல் மேப் இல் தேடினால் கூட கிடைக்கிறது.
கீழடி ஆய்வை தமிழர்களுடன் சுருக்கி விடாதீர்கள். இதைத்தான் எச்.ராஜா போன்ற ஆரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மொழியில் இருந்து 80 (84) மொழிகள் தோன்றி இருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டுக்குள் மட்டும் 64 மொழிகள் பேசக்கூடிய பழங்குடிகள் இருக்கிறார்கள். அத்தனை மொழிக் குடும்பத்தையும் இணைக்கவே திராவிடர் மொழி குடும்பம். ஆரியர்களுக்கு எதிர் சொல் திராவிடர்.
பி.ஜே.பி எச்.ராஜா இன்று கீழடி ஆய்வுகளை கண்டு, "ஆகா! தமிழ் நாகரிகம் தான் உண்மை. திராவிடம் பொய்த்து போய்விட்டது" என்று கூறும் போதே தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டாமா?
'தமிழ்' பேசும் 'தமிழர்கள்' போர்வைக்குள் 'பார்ப்பனர்கள்' தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொள்வார்களே தவிர, பூணூல் அறுத்துவிட்டு, சமஸ்கிருதம் மொழியை புறக்கணித்துவிட்டு சமத்துவம் பேசவும், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசவும் செய்வார்களா என கேட்டார் பெரியார்.
பெரியார் சவாலை எச்.ராஜாவால் ஏற்க முடியுமா?

அல்லது, "தமிழ் பேசும் பார்ப்பனர்கள் தமிழர்கள் தான். ஆனால் தமிழனாக இருந்தாலும் உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை. எனவே தமிழ் பார்ப்பனர்களை ஆதரிக்கிறேன், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்பதை எதிர்க்கிறேன்" என்று கூறிய நமது சமகால திருட்டு தமிழ்தேசியம் பேசிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எடுப்பிடி வேலை பார்க்கும் அரை காவி டவுசர் சீமானால் பெரியார் பேசியதை பேச முடியுமா? என சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே...
உங்களுக்கு சாதி வேண்டுமானால் எச்.ராஜா, சீமானுடன் நில்லுங்கள். நாங்கள் ஆரிய அடிமைகள் என்று பெருமிதம் கொள்ளுங்கள். தமிழர்கள் என்று கூறாதீர்கள். இவை தமிழர்களின் மரபணுக்களில் / சித்தாந்தங்களில் கூட இல்லை!
தமிழச்சி (Tamizachi)
04/10/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக