புதன், 9 அக்டோபர், 2019

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட்டணம்

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட்டணம்News18 Tamil : ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளத. ஜியோ சிம் வரும் வரை, ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நெட்வொர்க்கில் அவுட்கோயிங் கால்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அவுட்கோயிங் கால்களும் இலவசம் என்ற அறிவிப்போடு ஜியோ களமிறங்கியது. இண்டெர்நெட் டேட்டாவுக்கும் எதிர்பார்த்திடாத சலுகைகளும் வழங்கப்பட்டது.


இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் ரீசார்ஜ் செய்யும் அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கட்டணம் லேண்ட்லைனுக்கு அழைக்கவோ, மற்ற ஜியோ சிம்முக்கு அழைக்கவோ கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇன்கம்மிங், அவுட்கோயிங், மிஸ்டு கால்களுக்கு மற்ற நெட்வொர்க்குக்கு  கட்டணம் செலுத்துகிறது ஜியோ.

இந்த கட்டணம் முறையை இல்லாமல் ஆக்க ட்ராயிடம் ஜியோ வலியுறுத்திவரும் நிலையில், அதனை மறு பரிசீலனை செய்யும்வரை இந்த கட்டணம் முறை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் கட்டணம் ரத்தாகும் என்றும் ஜியோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

இதன்படி, ரீசார்ஜ் வவுச்சர் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ. 10 -  124 நிமிடங்கள் - 1 ஜிபி டேட்டா

ரூ. 20 - 249நிமிடங்கள் - 2  ஜிபி டேட்டா

ரூ. 50 - 656நிமிடங்கள் - 5 ஜிபி டேட்டா

ரூ. 100 - 1,362நிமிடங்கள் - 10 ஜிபி டேட்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக