புதன், 16 அக்டோபர், 2019

சீன அதிபர் பூரண கும்ப மரியாதையை புறக்கணித்தன் பின்னணி!

Ks Raja : தமிழக அரசின் சார்பில் சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை
அளித்து, அங்கவஸ்திரம் அணிவிக்க மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அர்ச்சகர்கள் 5 பேர் வரவழைக்கப் பட்டு இருந்தனர். அவர்கள் கபாலீ சுவரர் கோவில் பிரசாதம், மாவிலை வைத்த சொம்பு பாத்திரம், மற்றும் தேங்காய் தட்டு, மாலை சகிதம் நின்று கொண்டு இருந்தனர். ஒரு அர்ச்சகர் கையில் சந்தனம் மற்றும் குங்குமத் தட்டுக்களுடன் காத்திருந்தார். அர்ச் சகர் ஒருவர் சீன அதிபருக்கு அங்க வஸ்திரம் அணிவிக்க மற்றொருவர் அவருக்கு மஞ்சள் தெளித்து கும்ப மரியாதை செய்த பிறகு ஒரு அர்ச்சகர் அதிபரின் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்து பிறகு அவர் காரில் ஏறுவார் என்று இருந்தது. இவை அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள சீன அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று அவர்களும் சரி என்று அனுமதி கொடுத்த பிறகுதான் விமான நிலையத்தில் அர்ச்சகர்கள் விமா னத்தின் அருகில் நின்றனர்.
இந்த நிலையில் சீன அதிபர் விமானத்தை விட்டு இறங்கியதும் பறையாட்டம், மயிலாட்டம், ஒயி லாட்டம், பொய்க்கால் குதிரையாட் டம் எனத் தமிழக பாரம்பரிய இசை மற்றும் ஆட்டங்கள் துவங்கின. அதிபரும் அதை நின்று நிதானமாக ரசித்துக்கொண்டு இருந்தார்.
பிறகு அவரது கார் அருகில் வந்தது. ஒரு அதிகாரி, அர்ச்சகர்கள் நிற்பதையும், அவர்கள் அதிபருக்கு மரியாதை செய்யவேண்டியதையும் சீனாவில் இருந்து அதிபருடன் வந்திருந்த அதி காரிகளிடம் கூறினார் இது குறித்து;
ஆனால், அதிபர் இதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என்று கூறி அங்கிருந்த அர்ச்சகர்களை காரில் இருந்து விலகி நிற்கச்சொல்லி விட் டனர். அதன் பிறகு அதிபரின் காருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அர்ச் சகர்கள் சில அடி தூரம் பின்னால் சென்று விட்டனர். அதன் பிறகு அதிபர் காரில் புறப்பட்டுச்சென்றுவிட்டார்.

 சீன அதிபர் மதம் தொடர்பான எந்த நிகழ்வுகளையுமே எந்த நாட் டிற்குச்சென்றாலும் விரும்பாதவர். ஆனால், சென்னை தியாகராயர் நகரில் உள்ள சீனத் தூதரக அலு வலகத்தில் பணிபுரியும் பார்ப்பனர்கள் பூரண கும்ப மரியாதை என்பது கலாச்சார நிகழ்ச்சி என்று பொய் சொல்லி, சீன அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றுவிட்டனர். அவர் களும் இது ஒரு கலாச்சார நிகழ்வு என்ற பார்வையில் அனுமதி கொடுத்துவிட்டனர். ஆனால், சீன அதிபர் பூர்ணகும்ப மரியாதை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் வர்ணாஸ்ரம அடிப்படையில் வழங் கப்படும் மரியாதை என்று தெரிந்து கொண்டு அதை மறுத்துவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக